நாடளாவிய ரீதியில் டெங்கு நோயினால் 98 ஆயிரம் பேர் பாதிப்பு

Published By: Raam

21 Jul, 2017 | 09:54 AM
image

நாட­ளா­விய ரீதியில் டெங்கு நோயினால் 98 ஆயி­ரத்­துக்கும் அதி­க­மான பொது­மக்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். டெங்கு நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்ள மொத்த நோயா­ளர்­களுள் 30 சத­வீ­த­மானோர் பாட­சாலை மாண­வர்­க­ளாவர் என்­பது சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இலங்­கையில் இந்த ஆண்டில் டெங்கு நோயினால் 98 ஆயி­ரத்து 390 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். அதேபோல் 276 பேர் இது­வ­ரையில் டெங்கு நோயினால் பாதிக்­கப்­பட்டு உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரி­வித்­துள்­ளது. இந்­நி­லையில் டெங்கு நோயினால் பாதிக்­கப்­பட்­டுள்ள மொத்த நோயா­ளர்­களுள் 30 சத­வீ­த­மானோர் பாட­சாலை மாண­வர்­க­ளாவர் என்­பது சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. 

எனவே பாட­சாலை சுற்­றாடல் பகு­தியை டெங்கு நுளம்பு அற்ற வல­ய­மாக மேம்­ப­டுத்தும் முழு­மை­யான பொறுப்பு பாட­சாலை அதி­பர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், பொது­மக்கள் வீட்டு சூழலை சுத்­த­மாக வைத்­தி­ருக்க வேண்டும் என சுகா­தாரத் துறை பணித்­துள்­ளது.

மேலும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு மற்றும் சுகா­தார அமைச்சு இணைந்து நாட்­டி­லுள்ள பாட­சாலை அதி­பர்­க­ளுக்கும் தெளி­வு­ப­டுத்­து­வ­தற்கு கல்வி அமைச்சின் செய­லாளர் ஊடாக நட­வ­டிக்கை மேற்­கொள்ளப்­படும் என கூறப்­பட்­டுள்­ளது. மேலும் டெங்கு அச்­சு­றுத்தல் உள்ள வல­ய­மாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள மாவட்­டங்கள் தொடர்பில் கூடு­த­லான கவனஞ் செலுத்தி, நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட வேண்டும் எனவும் எதிர்­கா­லத்தில் ஏற்­ப­டக்­கூ­டிய கால­நிலை மாற்றம் மற்றும் மழை­யுடன் கூடிய காலப்­ப­குதி தொடர்பில் கவனம் செலுத்தி டெங்கு ஒழிப்பு நடவடிக்கையை மேம்படுத்துவது தொடர்பிலும் வேலை த்திட்டங்கள் எடுக்கவும் சுகாதார அமைச்சு செயற்படுவதாக கூறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகின் மிக நீண்ட தொடு உணர்...

2026-05-16 16:42:22
news-image

UPDATE ; வனவாசல ரயில் விபத்து...

2026-05-16 16:13:27
news-image

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டம்...

2026-05-16 17:03:48
news-image

கடலில் காற்றின் வேகம், மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடும்...

2026-05-16 16:33:52
news-image

முள்ளிவாய்க்கால் கண்ணீர் ஓயாது ; அந்த...

2026-05-16 15:09:07
news-image

களுத்துறையில் 600 போதை மாத்திரைகளுடன் ஒருவர்...

2026-05-16 14:52:18
news-image

ரம்பேவ பகுதியில் விநியோகிக்கப்பட்ட MOP உரத்தின்...

2026-05-16 14:58:43
news-image

மானிப்பாயில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்வு

2026-05-16 15:19:02
news-image

காலி கோட்டை அமைதிப் போராட்டம் :...

2026-05-16 14:48:58
news-image

வாகன இறக்குமதி வரி அதிகரிப்பு தற்காலிகமானது...

2026-05-16 14:43:20
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சென்னை கிளையின் தவறால்...

2026-05-16 13:42:23
news-image

மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்துக்காக மனப்பாங்கு ரீதியாகவும்...

2026-05-16 13:11:49