எம்மில் பலரும் ஒரு பழமொழியை அடிக்கடி பாவிப்பதைக் கண்டிருப்போம். கேட்டிருப்போம். அதாவது ' கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது.' நாம் உழைத்து முன்னேறினாலும் எம்முடன் இருந்து உதவும் நண்பர்கள் கூட அவர்களின் பொருளாதார எல்லை மற்றும் சமூக அந்தஸ்தை கடந்து நாம் செல்லும்போது அவர்களுக்குள் ஒரு பொறாமை எட்டிப் பார்க்கும்.
இவை கண் திருஷ்டியாக மாற்றமடைந்து உங்களுடைய அனைத்து முயற்சிகளிலும் பாதிப்பை உண்டாக்கும். நீங்கள் இதற்காக எந்த பரிகாரத்தை மேற்கொண்டாலும் அதனால் பரிபூரண பலன் கிடைக்காது.
இந்நிலையில் இதுபோன்ற சூழலை எதிர்கொண்டிருப்பவர்களுக்காக எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் ஒரு சூட்சமமான குறிப்பை வழங்கி இருக்கிறார்கள்.
இதற்குத் தேவையான பொருட்கள் : பப்பாளி காய், கல் உப்பு, குங்குமம்.
சனி அல்லது ஞாயிறுகிழமைகளை தெரிவு செய்து கொள்ளுங்கள். மேலே கூறப்பட்ட பப்பாளிக்காய் ஒன்றை வாங்கி வந்து அதன் மேல் பகுதியில் சிறிதாக துளையிட்டு அதில் சிறிதளவு கல் உப்பு மற்றும் குங்குமத்தை இடவேண்டும்.
பிறகு அந்த பப்பாளி காயை அன்றிரவு எட்டு மணி முதல் ஒன்பது மணிக்குள் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் அல்லது அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் திருஷ்டி சுற்ற வேண்டும் .
அதன் பிறகு அந்த பப்பாளிக்காயை முச்சந்தியில் அல்லது பாதுகாப்பான இடத்தில் உடைத்து விட வேண்டும். இதனை மேற்கொள்ளும் போது உங்கள் மீது நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆக்கிரமித்திருக்கும் கண்ணேறு அழிந்து, ( கண் திருஷ்டி) அதிர்ஷ்டம் உண்டாகி, லாபம் கிடைக்கத் தொடங்கும். அதனுடன் முன்னேற்றமும் ஏற்படும்.
தொகுப்பு: சுபயோக தாசன்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM