(நெவில் அன்தனி)
கொழும்பு றோயல் கல்லூரி ஹொக்கி கழகம் 20ஆவது வருடம் ஏற்பாடு செய்துள்ள பாடசாலைகளுக்கு இடையிலான அணிக்கு எழுவர் நீலம் மற்றும் பொன் ஹொக்கி (Blue and Gold Hockey Sevens 2025) சுற்றுப் போட்டி றோயல் கல்லூரி பிரதான மைதானத்தில் ஆகஸ்ட் 8ஆம், 9ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இந்த வருடம் அணிக்கு எழுவர் நீலம் மற்றும் பொன் ஹொக்கி போட்டியில் முதல் தடவையாக சர்வதேச மத்தியஸ்தர்கள் கடமையாற்ற உள்ளதுடன் தொலைக்காட்சி மீளாய்வு முறைமையும் அறிமுகமாகிறது.
இப் போட்டியில் மத்தியஸ்தம் வகிக்க நெதர்லாந்து, போலந்து, இந்தியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து ஹொக்கி மத்தியஸ்தர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
20 வயதுக்குட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையில் நடத்தப்படும் இப் போட்டியில்
யாழ்ப்பாணத்திலிருந்து வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி, மாத்தளை இந்து தேசிய பாடசாலை, மாத்தளை ஸாஹிரா கல்லூரி, கொழும்பு ஸாஹிரா கல்லூரி உட்பட 40 பாடசாலைகள் ஆண்கள் பிரிவில் போட்டியிடுகின்றன. பெண்கள் பிரிவில் 27 பாடசாலைகள் பங்குபற்றுகின்றன.
இப் போட்டியில் பங்குபற்றும் பிற மாவட்ட பாடசாலை அணிகளுக்கு உணவு, தங்குமிட வசதி, ஊட்டச்சத்து பாணம், குடிநீர் உட்பட சகல வசதிகளையும் ஏற்பாட்டாளர்கள் செய்துகொடுக்கவுள்ளனர்.
கடந்த வருடம் நடைபெற்ற போட்டியில் ஆண்களுக்கான கிண்ணப் பிரிவில் மாத்தளை புனித தோமஸ் கல்லூரியும் கோப்பை பிரிவில் கண்டி வித்யார்த்த கல்லூரியும் குவளைப் பிரிவில் மொறட்டுவை பிறின்ஸ் ஒவ் வேல்ஸ் கல்லூரியும் சம்பியனாகின.
பெண்களுக்கான கிண்ணப் பிரிவில் வென்னப்புவை திருக்குடும்ப கன்னியாஸ்திரிகள் மடம் பாடசாலையும் கோப்பை பிரிவில் கொழும்பு மியூசியஸ் கல்லூரியும் குவளைப் பிரிவில் கண்டி சுவர்ணமாலி பெண்கள் பாடசாலையும் சம்பியனாகின.
இப் போட்டிக்கு ESOFT நிறுவனம் அனுசரணை வழங்குவதால் இப் போட்டி ESU Blue and Gold Hockey Sevens 2025 என பெயரிடப்பட்டுள்ளது.
CIAP (பிறைவேட்) லிமிட்டெட், மினெல் லங்கா (பிறைவேட்) லிமிட்டெட், LTL ட்ரான்ஃபோர்மர்ஸ் (பிறைவேட்) லிமிட்டெட் ஆகியன தங்க அனுசரணையாளர்களாக இணைந்துள்ளன.
றோயல் கல்லூரியில் ஹொக்கி விளையாட்டை மேம்படுத்தும் குறிக்கோளுடன் நிஹால் நிலவீர, மஹிந்த இலங்ககே, டி. சிறிசேன, சி. ஜயசிங்க, எம். வித்தான, ஜே. டி சில்வா, ஏ. ஜயசிங்க, பி. டி சில்வா ஆகியோர் இணைந்து றோயல் கல்லூரி ஹொக்கி கழகத்தை 1991இல் ஸ்தாபித்தனர்.
அதனைத் தொடர்ந்து 1992இல் முதலாவது அழைப்பு பாடசாலைகள் ஹொக்கி போட்டியை இக் கழகத்தினர் நடத்தியிருந்தனர். அப் போட்டியில் 14 பாடசாலை அணிகள் பங்குபற்றின.
சில கால இடைவெளிக்குப் பின்னர் 2013இல் மீண்டும் இப் போட்டிக்கு உயிர்கொடுக்கப்பட்டபோது 27 ஆண்கள் பாடசாலைகளும் 16 பெண்கள் பாடசாலைகளும் பங்குபற்றின.
இப்போது அந்த எண்ணிக்கைகள் முறையே 40ஆகவும் 27ஆகவும் அதிகரித்துள்ளன.
இது இவ்வாறிருக்க றோயல் கல்லூரியின் 14, 16 மற்றும் 20 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான சீருடைகளு; வழங்க்பபட்டுள்ளது.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM