ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உள்ளூர் ஒளிபரப்பு மற்றும் நிகழ்ச்சி பங்காளர் Thinkcube Systems (Pvt) Ltd

30 Jul, 2025 | 10:43 PM
image

(நெவில் அன்தனி)

உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள், இலங்கை இளைஞர் மற்றும் வளர்ந்து வரும் அணிகளுடன் வெளிநாட்டு அணிகள் விளையாடும் கிரிக்கெட் போட்டிகள் ஆகியவற்றுக்கான உத்தியோகபூர்வ ஒளிபரப்பு மற்றும் நிகழ்ச்சி உரிமை பங்களாராக  Content I Asia (Pvt) Ltd   உடன் இணைந்து  f ThinkCube Systems (Pvt) Ltd, ஐ நியமித்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் (SLC) அறிவித்துள்ளது.

இந்த வருடம் ஏப்ரல் 24ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் இந்தப் பங்களாளித்துவம் இலங்கையின் உள்நாட்டு, இளைஞர் மற்றும் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்களின் தொடர்ச்சியான வளர்ச்சியில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம்  அனைத்து ஆண்களுக்கான உள்நாட்டுப் போட்டிகள், இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு அணிகளுடன் இலங்கை ஆண்கள் ஏ அணி, வளர்ந்து வரும் அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணிகள் விளையாடும் போட்டிகள், இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு அணிகளுடன்  இலங்கை பெண்கள் ஏ அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகள் விளையாடும் போட்டிகள்  ஆகியவற்றை ஒளிபரப்பவும் நிர்வகிக்கவும் குறிப்பிட்ட நிறுவனத்திற்கு பிரத்தியேக உரிமைகளை வழங்குகிறது.

இந்தப் போட்டிகள்  ThinkCube Systems (Pvt) Limited,  இன் உத்தியோகபூர்வ சேவையான  Talent TV (free-to-air) இல் நேரடியாக ஒளிபரப்பப்படும். மேலும் இந்த சேவையின்  OTT   தளமான  www.talenttv.lk and    மற்றும்  Sri Lanka Cricket YouTube Channel அலைவரிசைகளிலும் கிடைக்கும்.

 UHF 47    (நாடு முழுவதும்),  UHF 22   (கொழும்பு), ருர்கு 28 (தென் மாகாணம்),  UHF 32   (கரகஹதென்ன) மற்றும் UHF 56   (இரத்தினபுரி) அலைவரிசைகள் மூலம் Talent TV  நாடு   முழுவதும் அணுகக்கூடியது.

'இந்த பங்காளித்துவம் உள்நாட்டு, இலங்கை இளைஞர், யுவதிகள் மற்றும் வளர்ந்து வரும் கிரிக்கெட்டை நாங்கள் எவ்வாறு ஊக்குவிக்கிறோம் மற்றும் வெளிப்படுத்துகிறோம் என்பதில் ஒரு மறுரூபத்தை பிரதிபலிக்கிறது. இந்த  பங்காளித்துவத்தின் மூலம் இந்தப் போட்டிகளில் விளையாடும் வீர, வீராங்கனைகளின ஆற்றல் வெளிப்பாடுகளை இரசிகர்கள் நேரடியாக பார்க்கக்கூடியதாக இருக்கும்' என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா தெரிவித்தார்.

இந்த பங்காளித்துவம் உள்நாட்டு, இளைஞர், யுவதிகள் மற்றும் வளர்ந்து வரும் வீர, வீராங்கனைகளின் கிரிக்கெட் வளர்ச்சிக்கு  கணிசமான பங்களிப்பை வழங்கும் எனவும் வீரர்கள், இரசிகர்கள் மற்றும் அனுசரணையாளர்கள் உட்பட அனைத்து பங்குதாரர்களுக்கும் பயனளிக்கும் எனவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் நம்புகிறது.

இதேவேளை,  'ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துடனான இந்த நீண்டகால பங்காளித்துவம் இலங்கையின் உள்நாட்டு கிரிக்கெட் விளையாட்டில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

மேலும் நாடு தழுவிய இலவச ஒளிபரப்பு சேவையான டெலன்ட் டிவி மற்றும் முன்னணி சர்வதேச ஒளிபரப்பாளர்களுடன் இணைப்பதன் மூலம், ஒவ்வொரு போட்டியையும் நாடு முழுவதும் உள்ள வீடுகளுக்கும், உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கும் கொண்டு செல்வோம்.

எங்கள் அணுகுமுறை வணிக மதிப்பையும் டிஜிட்டல் மற்றும் OTT இயக்கத்தையும் அதிகரிக்கச் செய்கிறது' என தின்க்கியூப் சிஸ்டம்ஸ் (பிறைவேட்) லிமிட்டெடின் பணிப்பாளர் தமித்த காரியவசம் தெரிவித்தார்.

இந்த பங்காளித்துவம் மூலம் இலங்கையில் ஏற்கனவே நடைபெற்ற பல்வேறு கிரிக்கெட் போட்டிகள் வெற்றிகரமாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டிருந்ததாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிரிக்கெட் ஜாம்பவான் சேர் கார்பீல்ட் சோபர்ஸ்...

2026-07-18 09:51:09
news-image

நடப்பு சம்பியன் புளூ ஸ்டார் கழகத்தை...

2026-07-18 05:26:17
news-image

கோலாகல ஆரம்ப விழாவுடன் எல்பிஎல் தொடங்கியது;...

2026-07-18 00:35:39
news-image

வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஆறுதல் வெற்றியை...

2026-07-18 08:46:44
news-image

ஜெவ்னா கிங்ஸ் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக வெளியாகும்...

2026-07-17 15:31:54
news-image

இந்தியாவுடனான ஒருநாள் தொடரை இங்கிலாந்து சமப்படுத்தியது;...

2026-07-17 12:24:24
news-image

ஆட்ட நிர்ணயம் தொடர்பில் லங்கா பிறீமியர்...

2026-07-17 15:31:56
news-image

கணிசமான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட 19இன்கீழ் இலங்கை...

2026-07-16 20:31:40
news-image

கொழும்பு SSC மைதானத்தில் LPL தொடக்க...

2026-07-16 20:26:18
news-image

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணம்,...

2026-07-16 18:24:57
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்தலை விரைவில் நடத்துமாறு...

2026-07-16 15:53:48
news-image

போக்லண்ட் பதாகையை ஏந்தியதால் ஆர்ஜன்டினா மீது...

2026-07-16 18:22:47