கல்முனை, இறக்காமம் ஆகிய பிரதேசங்களின் உணவகங்களில் திடீர் சோதனை!

30 Jul, 2025 | 01:35 PM
image

பொதுமக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்புமிக்க உணவுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில்  கல்முனை பிராந்தியத்திலுள்ள உணவகங்கள்இ உணவு கையாளும் நிறுனங்களை சோதனைக்குட்படுத்தும் விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைவாக  கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் கடந்த 28 ஆம் திகதியில் இருந்து தொடர்ச்சியாக  கல்முனை மற்றும் இறக்காமம் பிரதேசங்களில் உள்ள ஹோட்டல்கள் உள்ளிட்ட உணவு கையாளும் நிறுவனங்கள் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டன.

பிராந்திய மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஐ.எல்.எம்.லபீர், உணவு மருந்துகள் பரிசோதகர் எஸ்.ஜீவராஜா உள்ளிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இணைந்து குறித்த சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

சுகாதார விதிமுறைகளை மீறிய உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, பழுதடைந்த உணவுப் பொருட்களும் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன. பாவிக்க முடியாத, சேதமடைந்த உணவு தாயாரிக்கும் பாத்திரங்களும் இதன்போது கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களின் நலன்கருதி பிராந்தியத்தில் உள்ள உணவகங்கள், உணவு கையாளும் நிறுவனங்கள் சோதனைக்குட்படுத்தும் வேலைத்திட்டம் பிராந்திய பனிப்பாளரின் உத்தரவிற்கமைவாக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டெஸ்ஃபெரிஒக்சமின் மெசிலேட் ஊசிமருந்துக் குப்பிகள் விநியோகிப்பதற்கு...

2025-12-11 17:23:43
news-image

மாலைதீவு மற்றும் இலங்கையிடையே விளையாட்டு மற்றும்...

2025-12-11 17:16:22
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்குThilakawardena Textile...

2025-12-11 20:58:44
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு10 மில்லியன்...

2025-12-11 20:57:03
news-image

கொழும்பில் உள்ள இராஜதந்திரிகளின் தனிப்பட்ட நிதியிலிருந்து‘Rebuilding...

2025-12-11 20:51:51
news-image

மன்னார் மற்றும் முள்ளிக்குளம் பிரதேசங்களில் 50...

2025-12-11 17:27:59
news-image

இலங்கையின் கரையோர மற்றும் சமுத்திரச் சுற்றாடலில்...

2025-12-11 17:15:58
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Maga...

2025-12-11 19:48:08
news-image

அரசின் அனர்த்த மீட்பு நிதியத்துக்கு இரண்டு...

2025-12-11 19:41:49
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Memon...

2025-12-11 19:37:09
news-image

ஜேர்மன் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

2025-12-11 19:56:42
news-image

யாழ்ப்பாணம், களனி, கொழும்பு மற்றும் வயம்ப...

2025-12-11 17:15:32