நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் குழந்தை உட்பட மூன்று பேர் பலி!

30 Jul, 2025 | 09:07 AM
image

நாட்டின் சில பகுதிகளில் நடந்த வீதி விபத்துகளில் ஒன்றரை வயது குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

மாத்தளை, மதவாச்சி மற்றும் கட்டான  பொலிஸ்  பிரிவுகளில் நேற்று திங்கட்கிழமை  (29)  இந்த விபத்துகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தளை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட மாத்தளை - ரத்தோட்ட  வீதியில் உள்ள மணந்தண்டாவெல பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டி கட்டுபாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் பின் இருக்கையில் பயணித்த தாயும் குழந்தையும் விபத்தில் காயமடைந்த நிலையில், மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தளை பகுதியைச் சேர்ந்த  ஒன்றரை வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இதேவேளை, மதவாச்சி   பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A09 வீதியில் உள்ள வெலிஓயா சந்திப்பில், லொரியொன்று  கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் மற்றும் மற்றொரு லொரியுடன் மோதியுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்து ரம்பேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்  மதவாச்சி பகுதியைச் சேர்ந்த 58 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

அத்தோடு, கட்டான பொலிஸ் பிரிவில் நீர்கொழும்பு - மீரிகம வீதியில் லங்காமாதா வீதியில் வலதுபுறம் திரும்பும் சந்திப்பில், எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மீது கெப் வண்டி மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்  கட்டான பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மேலும், இந்த வாகன விபத்துக்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்சவுக்கு நாடாளுமன்றம்...

2026-09-07 18:30:59
news-image

குருநாகலில் அரிய கடல்வாழ் உயிரின ஓடுகளை...

2026-09-07 17:40:40
news-image

'கொஸ் மல்லி'யின் மைத்துனரான 'பூத களுவா'...

2026-09-07 17:39:52
news-image

சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் சில கருத்துகள்...

2026-09-07 17:38:14
news-image

பெண்கள், சிறுவர் பாதுகாப்பு குறித்து ஐ.நா....

2026-09-07 17:17:59
news-image

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

2026-09-07 17:36:25
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இருவரின் 7 கோடி...

2026-09-07 16:01:44
news-image

சுற்றுச்சூழல் அறிக்கையிடலில் புதிய ஊடக முன்முயற்சி

2026-09-07 15:33:29
news-image

ராஜபக்‌ஷ ஆட்சியாளர்களின் ஊழல்களே நாட்டின் பொருளாதார...

2026-09-07 15:24:19
news-image

நுவரெலியா பேருந்து தரிப்பிடத்தில் போக்குவரத்து சேவையை...

2026-09-07 15:32:04
news-image

மண்சரிவினால் பாதிக்கப்பட்டது வீதி: பொலிஸ் வாகனங்களில்...

2026-09-07 15:14:09
news-image

நல்லூர் தேர் திருவிழாவன்று யாழ். நல்லூர்...

2026-09-07 15:01:28