(நெவில் அன்தனி)
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்டுவந்த 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான இலங்கை இளையோர் லீக் கிரிக்கெட் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட காலி பெண்கள் அணி சம்பியனானது.
இந்த சுற்றுப் போட்டியில் கொழும்பு, கண்டி, காலி, தம்புள்iளை ஆகிய நான்கு அணிகள் பங்குபற்றின.


என்.சி.சி. மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (29) நடைபெற்ற இறுதிப் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட கொழும்பு பெண்கள் அணியை 90 ஓட்டங்களால் 19 வயதுக்குட்பட்ட காலி பெண்கள் அணி வெற்றி கொண்டு சம்பியனானது.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய காலி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்களைக் குவித்தது.
நேதாஜி இசுராஞ்சலி, ரஷ்மி நேத்ராஞ்சலி ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 103 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர்.
இசுராஞ்சலி 9 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 77 ஓட்டங்களுடனும் நேத்ராஞ்சலி 4 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உடப்ட 39 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
அவர்களை விட ஆரம்ப வீராங்கனை சஞ்சனா காவிந்தி 21 ஓட்டங்களைப் பெற்றார்.


144 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு அணி 12 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 53 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.
நெத்துக்கி குடலிகம, ஒனாலி ஆதீஷா ஆகிய இருவரும் தலா 11 ஓட்டங்களைப் பெற்றதுடன் அவ்வணியில் வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையை எட்டவில்லை.
பந்துவீச்சில் ஷெஹாரா இதுவரி 10 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் தினித்தி ப்ரதிபாஷினி 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இறுதி ஆட்டநாயகி: நேதாஜி இசுராஞ்சலி (காலி)

சுற்றுப் போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீராங்கனை: சஞ்சனா காவிந்தி (காலி)

சுற்றுப் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளர்: ரிஷ்மி சஞ்சனா (காலி)

தொடர்நாயகி: நெத்மி உப்பேஷ்கா (தம்புள்ளை)
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM