இனிய பாரதியின் இன்னும் ஒரு சகாவான் சபாபதி மட்டு கிரான் வைத்து சிஜடி யினரால் கைது இதுவரை இனிய பாரதியின் சகாக்கள் 4 பேர் கைது  

Published By: Vishnu

29 Jul, 2025 | 08:41 PM
image

இனியபாரதியின் இன்னுமொரு சகாவான வெலிகந்தை தீவுச்சேனையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் சபாபதி என்பவரை மட்டக்களப்பு கிரானில் வைத்து  செவ்வாய்க்கிழமை (29) மாலை 4.00 மணியளவில் கொழும்பிலிருந்து சென்ற குற்ற விசாரணைப் பிரிவு சிஜடி யினர் கைது செய்துள்ளனர்.

ரி.எம.வி.பி கட்சியைச் சேர்ந்த இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஒருங்கிணைப்பாளருமான கே. புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோரை 2007-6-28 ம் திகதி திருக்கோவில் பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் படுகொலை தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 6ம் திகதி திருக்கோவில் மற்றும் மட்டு சந்திவெளி பகுதிகளில் வைத்து சிஜடியினர் கைது செய்தனர்.

இதில் கைது செய்த இனியபாரதியிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் வெலிகந்தை தீவுச்சேனையை வதைமுகாமில் இருந்து செயற்பட்டுவந்தவரும் ; இனிய பாரதியின் சகாவான அந்த பிரதேசத்தைச் சேர்ந்த பா.சபாபதியை கிரான் வைரவர் கோவில் வீதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து சம்பவதினமான செவ்வாய்க்கிழமை(29) மாலை 4.00 மணியளவில் சிஜடியினர் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை  கொழும்புக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கையை சிஜடி யினர் மேற்கொண்டுவருகின்றனர்

இதேவேளை இனியபாரதியை கைது செய்து விசாரணையின் பின்னர் இனிய பாரதியின் முன்னாள் சாரதி செந்தூரன், அவரது சாகாவான சந்திவெளியைச் சேர்ந்த சசீந்திரன் தவசீலன் மற்றும் சகாவான திருக்கோவில் விநாயகபுரத்தைச் சேர்ந்த தொப்பி மனாப் என்றழைக்கப்படும் விக்கினேஸ்வரன் மற்றும் தற்போது கைது செய்யப்பட்டவர் உட்பட இனியபாரதியின் சகாக்கள் ஆகிய 4 பேரை சிஜடி யினர் தொடர்ச்சியாக கைது செய்துவருவதையிட்டு  இனியபாரதி மற்றும் பிள்ளையானுடன் தொடர்புபட்டவர்கள் பயப் பீதியில் இருந்துவருவது குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படும் இரண்டு தமிழ்...

2026-08-08 16:22:27
news-image

மாணவர்கள் தமது இலக்கை நோக்கி பயணிக்க...

2026-08-08 15:22:13
news-image

உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது...

2026-08-08 14:56:36
news-image

இரத்மலானையில் ஆயுதங்கள், கைக்குண்டு மற்றும் பணத்துடன்...

2026-08-08 14:36:20
news-image

பதுளையில் புதையல் தோண்டி எடுக்கும் நோக்கில்...

2026-08-08 13:20:57
news-image

உயர்தர பரீட்சார்த்திகள் பொறுப்புடன் செயற்பட வேண்டும்...

2026-08-08 13:56:21
news-image

இலங்கை தபால்துறையை நவீனமயப்படுத்துதல் குறித்த கலந்துரையாடல்

2026-08-08 13:51:43
news-image

கட்டானையில் 75 லீற்றர் சட்டவிரோத மதுபானத்துடன்...

2026-08-08 13:20:07
news-image

கிளிநொச்சி திருவையாறுப் பகுதியில் நான்கு ஏக்கர்...

2026-08-08 13:47:48
news-image

கடல் கொந்தளிப்பு எச்சரிக்கை: மீனவ சமூகத்திற்கு...

2026-08-08 13:13:25
news-image

நாடு தழுவிய சோதனைகளில் 431 தரமற்ற...

2026-08-08 13:05:24
news-image

தொம்பகஹவெல - பஹதராவ குளத்தில் நீராடச்...

2026-08-08 12:48:03