ஸ்பெய்னை பெனல்டிகளில் வீழ்த்தி மகளிர் யூரோ கிண்ண கால்பந்தாட்ட சம்பியன் பட்டத்தை இங்கிலாந்து தக்கவைத்தது

Published By: Digital Desk 3

29 Jul, 2025 | 05:14 PM
image

(நெவில் அன்தனி)

சுவிட்சர்லாந்தின் பசெல், சென். ஜேக்கப் பார்க் விளையாட்டரங்கில் வார இறுதியில் நடைபெற்ற மகளிர் ஐரோப்பிய கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் நடப்பு மகளிர் உலக சம்பியன் ஸ்பெய்னை 3 - 1 என்ற பெனல்டி அடிப்படையில் வெற்றிகொண்ட இங்கிலாந்து, 2023இல் வென்ற சம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது.

இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட இந்தப் போட்டியின் 25ஆவது நிமிடத்தில் ஸ்பெய்ன் சார்பாக மரியோனா கெல்டென்டி கோல்போட்டார்.

அந்த சந்தரப்பத்தில் அத்தேனியா டெல் கெஸ்டிலோ பரிமாறிய பந்தை நோக்கி ஓடிய ஓனா பெட்ல், பந்தை நகர்த்திசென்று எதிரணியின் கோல் எல்லையை நோக்கி உயர்வாக  பரிமாறி னார். அந்தப் பந்தை நோக்கி உயரே தாவிய மரியோனா கெல்டென்டி தனது தலையால் பந்தை முட்டி கோலாக்கினார்.

இடைவேளையின்போது ஸ்பெய்ன் 1 - 0 என்ற கோல் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.

இடைவேளை முடிந்த பின்னர் ஆட்டம் தொடர்ந்தபோது போட்டியின் 57ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து சார்பாக கோல் நிலையை அலெசியா ரூசோ சமப்படுத்தினார்.

ஸ்பெய்ன் கோல் எல்லையை நோக்கி க்ளோ கெலி பரிமாறிய பந்தை நோக்கி உயரே தாவிய அலேசியா ரூசோ மிக அலாதியாக தலையினால் முட்டி பந்தை கோலினுள் புகுத்தினார்.

அதனைத் தொடர்ந்து இரண்டு அணிகளும் வெற்றிகோலை போடுவதற்கு கடும் பிரயாசையுடன் விளையாடின.

ஆனால், ஆட்டம் முழு நேரத்தைத் தொட்டபோது இரண்டு அணிகளும் தலா ஒரு கோலுடன் சமநிலையில் இருந்தன.

இதனை அடுத்து மத்தியஸ்தரினால் மேலதிக நேரம் வழங்கப்பட்டது.

தலா 15 நிமிடங்களைக் கொண்ட 30 நிமிட மேலதிக நேரத்தின்போது இரண்டு அணிகளினாலும் வெற்றி கோலை போட முடியாமல் பொனது.

இந் நிலையில் சம்பியன் அணியைத் தீர்மானிக்கும் பொருட்டு பெனல்டி முறை அமுல்படுத்தப்பட்டது.

ஸ்பெய்னின் இரண்டு பெனல்டிகளை இங்கிலாந்து கோல்காப்பாளர் ஹனா ஹெம்ப்டன் தடுத்த நிறுத்த இங்கிலாந்து 3 - 1 என்ற பெனல்டி முறையில் வெற்றியீட்டி சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'எல்லா புகழும் என் தந்தைக்கே, அவர்...

2025-11-15 19:29:40
news-image

துடுப்பாட்டத்தில் இந்தியாவும் தடுமாறிய முதல் டெஸ்டில்...

2025-11-15 17:51:50
news-image

பாபர் அஸாம் சதம், ஸமான், ரிஸ்வான்...

2025-11-15 10:42:20
news-image

பாகிஸ்தானுடனான 2ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில்...

2025-11-14 19:27:42
news-image

பும்ராவின் 5 விக்கெட் குவியலின் பலனாக...

2025-11-14 18:36:10
news-image

பிக்கிள் பால் விளையாட்டுப் போட்டி வீரர்களை...

2025-11-14 18:35:04
news-image

இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்...

2025-11-14 15:08:13
news-image

குழப்பகரமான சூழ்நிலைக்கு பின்னர் இலங்கை -...

2025-11-14 13:37:02
news-image

முல்லைத்தீவு உள்ளக அரங்கில் மாகாண மல்யுத்த...

2025-11-14 12:49:19
news-image

கிரிக்கெட் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்ததற்காக இலங்கைக்கு பாகிஸ்தான்...

2025-11-14 12:36:16
news-image

இந்தியாவில் கடினமான டெஸ்ட் தொடரை சந்திக்கவுள்ள...

2025-11-13 19:51:15
news-image

தங்க நாணயம் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்...

2025-11-13 18:47:21