மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு சொந்தமான காணியில் தீ விபத்து !

29 Jul, 2025 | 02:11 PM
image

மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு சொந்தமான காணியில் ஏற்பட்ட தீ மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் பிரிவினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

இன்று செவ்வாள்க்கிழமை (29)  காலை மட்டக்களப்பு புகையிரத நிலையத்தின் விடுதிகள் மற்றும் பெற்றோலியம் கூட்டுத்தாபனத்திற்கு அருகிலிருந்த காணியில் தீ சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபர்களினால் இந்த தீவைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த தீவிபத்து தொடர்பில் மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தீகட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தின் பொலிஸர்h விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இந்த தீ விபத்து இடம்பெற்ற பகுதிக்கு சென்ற இராணுவத்தினர்,புகையிரத நிலையில் காவலர்கள் மற்றும் மாநகரசபையின் முதல்வுh சிவம்பாக்கியநாதன்,மாநகரசபை உறுப்பினர்கள் தீயினை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு உதவி வழங்கிவருகின்றனர்.

பெற்றோல் களஞ்சியங்கள் உள்ள காணிக்கு அருகில் தீவிபத்து ஏற்பட்டுள்ளதனால் அவற்றினை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு தரப்பினரும் குறித்த பகுதியில் குவிந்துள்ளதை காணமுடிகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுமார் 300 கிலோ போதைப்பொருட்களுடன் 6...

2025-11-12 10:41:26
news-image

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன்...

2025-11-12 10:22:56
news-image

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

2025-11-12 09:59:37
news-image

பெருந்தோட்ட மக்களுக்கான தீர்வுகளை மலினப்படுத்தும் எதிர்க்கட்சியின்...

2025-11-12 10:00:34
news-image

வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு...

2025-11-12 09:38:17
news-image

குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள...

2025-11-12 09:37:06
news-image

தமிழ் மக்களுக்கு அரசியல் நோக்கமின்றி அபிவிருத்தி...

2025-11-12 09:26:45
news-image

சுற்றுலா செல்லும் போது சமூக வலைதளங்களில்...

2025-11-12 09:25:43
news-image

அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய...

2025-11-12 09:23:49
news-image

இன்றைய வானிலை

2025-11-12 06:42:43
news-image

விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

2025-11-11 16:48:02
news-image

கிவுல் ஓயாத் நீர்த்தேக்க திட்டத்திற்கான நிதி...

2025-11-11 16:45:18