அனைத்து மக்களின் சம்மதத்துடன் ஒரு அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப்புடனான சந்திப்பின் போது கோரியதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்துக் கலந்துரையாடினார்.

கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

அனைத்து மக்களின் சம்மதத்துடன் ஒரு அரசியல் சாசனம் உருவாக்கப்பட வேண்டும் என தாம் இந்த சந்திப்பின் போது கோரியதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

மேலும், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் , காணிப் பிரச்சினைகள் , அரசியல் கைதிகளின் பிரச்சினை, காணாமல் போனோர் பிரச்சினை , மீள் குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு போன்ற பல விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.