மெர்கன்டைல் ‘A’ பிரிவு பட்டத்தை மீண்டும் கைப்பற்றிய செலான் வங்கி மேசைப்பந்து அணி

29 Jul, 2025 | 11:25 AM
image

ஏழு வருட இடைவெளியின் பின்னர் செலான் வங்கி அண்மையில் மெர்கன்டைல் மேசைப் பந்து சங்கத்தின் (MTTA) நிறுவனங்களுக்கு இடையேயான Knockout மேசைப் பந்து சம்பியன்ஷிப்பின் ‘A’ பிரிவு பட்டத்தை மீண்டும் வென்றது. 2018ஆம் ஆண்டுக்குப் பின்னர் செலான் வங்கி முதன்முதலாக ‘A’ பிரிவில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2005ஆம் ஆண்டு முதல், செலான் மேசைப் பந்து அணி கடந்த 20 ஆண்டுகளில் இரண்டைத் தவிர மற்ற அனைத்திலும் இறுதிப் போட்டியை எட்டியுள்ளமை விளையாட்டிற்கான அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் செயல்திறனை எடுத்துக் காட்டுகிறது.

அணியின் மூலோபாய ஆட்டத்தை எடுத்துக்காட்டும் வகையில் அரையிறுதியில் 99X Technologies அணியை 3-2 என்ற புள்ளி அடிப்படையில் வீழ்த்திய செலான் வங்கி, இறுதிப் போட்டியில் MAS Holdings அணியை 3-1 என்ற புள்ளி அடிப்படையில் தோற்கடித்து சிறப்பான வெற்றியை பெற்றது.

வங்கியின் வெற்றிப் பயணத்திற்கு சாலித ரஞ்சனவின் பங்களிப்பு முக்கியமாக இருந்ததுடன் இறுதிப் போட்டியை வெல்வதில் அவரது திறமை பெரும் பங்காற்றியது.

நான்கு முறை தேசிய சம்பியனும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான சாலித, knockout சம்பியன்ஷிப் முழுவதும் தோற்கடிக்கப்படாத வீரராக இருந்தார். இவர் இரட்டையர் பிரிவில் சசிக விஜேசூரியவுடன் இணைந்து இரட்டையர் பிரிவை வென்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் NÜWA...

2026-07-20 15:08:44
news-image

இலங்கையின் பொருளாதார நோக்குநிலை, முதலீட்டு வாய்ப்பு...

2026-07-17 14:11:28
news-image

Excello Developers நிர்மாணித்துள்ள ஆதவன் அடுக்குமனை:...

2026-07-16 19:06:20
news-image

2026 மாகாண பாடசாலை விளையாட்டுகளுக்கு தொடர்ச்சியாக...

2026-07-15 15:39:49
news-image

சிறிய, நடுத்தர வணிகங்களின் (SMB) வளர்ச்சியை...

2026-07-06 16:20:49
news-image

2,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 450க்கும் அதிக...

2026-07-06 13:23:11
news-image

ஸ்ரீ லங்கா இன்ஷுரன்ஸ் லைஃப் தனது...

2026-07-03 17:26:38
news-image

அஞ்சியோகிராம் சத்திர சிகிச்சை கவசங்களை நன்கொடையாக...

2026-07-01 18:05:32
news-image

'கொட்டகல கஹட்ட ரச வாசனா 2025'...

2026-07-01 16:49:54
news-image

50 அதிர்ஷ்டசாலிகளுக்கு மவுண்டன் சைக்கிள்கள் வழங்கி...

2026-07-01 16:39:39
news-image

ரூ. 200 பில்லியன் சொத்து மதிப்பை...

2026-07-01 16:34:30
news-image

இளம் விளையாட்டு வீரர்களை உலகத் தரத்திற்கு...

2026-07-01 09:50:18