SLC பிரதான லீக் 50 ஓவர் இறுதிப் போட்டியில் சிசிசி - பொலிஸ்

Published By: Vishnu

28 Jul, 2025 | 09:08 PM
image

(நெவில் அன்தனி)

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் (SLC) நடத்தப்பட்டுவரும் பிரதான லீக் 50 ஓவர் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு கொழும்பு கிரிக்கெட் கழகமும் பொலிஸ் விளையாட்டுக் கழகமும் தகுதிபெற்றுக்கொண்டன.

தமிழ் யூனியன் அண்ட் அத்லட்டிக் கழகத்தை கொழும்பு கிரிக்கெட் கழகமும் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்தை பொலிஸ் விளையாட்டுக் கழகமும் அரை இறுதிகளில் வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன.

சிசிசி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் தமிழ் யூனியன் கழகத்தை 68 ஓட்டங்களால் கொழும்பு கிரிக்கெட் கழகம் (CCC) வெற்றிகொண்டது.

இலங்கை ஏ அணி வீரர்களான பவன் ரத்நாயக்க, சொனால் தினூஷ ஆகியோர் குவித்த அரைச் சதங்கள், இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸின் 4 விக்கெட் குவியல் என்பன சிசிசி அணியை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.

தமிழ் யூனியன் சார்பாக சித்தார ஹப்புஹின்ன, சண்முகநாதன் ஷாருஜன் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் பெற்ற போதிலும் ஏனையவர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.

எண்ணிக்கை சுருக்கம்

CCC 50 ஓவர்களில் 309 - 7 விக். (சொனால் தினூஷ 83, பவன் ரத்நாயக்க 63, சஹான் கோசல 48, நிஷான் மதுஷ்க 36, விஜயகாந்த் வியாஸ்காந்த் 52 - 4 விக்.)

தமிழ் யூனியன் 41.1 ஓவர்களில் சகலரும் ஆட்டம் இழந்து 241 (சித்தார ஹப்புஹின்ன 76, சண்முகநாதன் ஷாருஜன் 56, பானுக்க ராஜபக்ச 31, கமிந்து மெண்டிஸ் 43 -  4 விக்., விஷ்வா பெர்னாண்டோ 40 - 2 விக்., நுவன் துஷார 41 - 2 விக்.)

பொலிஸ் கழகம் 4 விக்கெட்களால் வெற்றி

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்திற்கு எதிரான முதலாவது அரை இறுதிப் போட்டியில் பொலிஸ் விளையாட்டுக் கழகம் 4 விக்கெட்களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய அப் போட்டியில் பொலிஸ் கழகம் சார்பாக அஷேன் பண்டார பெற்ற ஆட்டம் இழக்காத 55 ஓட்டங்களே முழுப் போட்டியிலும் தனி நபர் ஒருவரால் பெறப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாகப் பதிவானது.

எண்ணிக்கை சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 39 ஓவர்களில் சகலரும் ஆட்டம் இழந்து 143 (தனஞ்சய லக்ஷான் 33, தினேஷ் சந்திமால் 30, ஏஞ்சலோ மெத்யூஸ் 29, டிலும் சுதீர 36 - 4 விக்., தனுஜ இந்துவர 24 - 3 விக்.)

பொலிஸ் வி.க. 35.5 ஓவர்களில் 144 - 6 விக். (அஷேன் பண்டார 55 ஆ.இ., விஷாத் ரந்திக்க 36, துனித் வெல்லாலகே 22 - 2 விக்., டில்ஷான் மதுஷன்க 41 - 2 விக்.)

CCCக்கும் பொலிஸ் கழகத்துக்கும் இடையிலான இறுதிப் போட்டி சிசிசி மைதானத்தில் நாளைமறுதினம் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'எல்லா புகழும் என் தந்தைக்கே, அவர்...

2025-11-15 19:29:40
news-image

துடுப்பாட்டத்தில் இந்தியாவும் தடுமாறிய முதல் டெஸ்டில்...

2025-11-15 17:51:50
news-image

பாபர் அஸாம் சதம், ஸமான், ரிஸ்வான்...

2025-11-15 10:42:20
news-image

பாகிஸ்தானுடனான 2ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில்...

2025-11-14 19:27:42
news-image

பும்ராவின் 5 விக்கெட் குவியலின் பலனாக...

2025-11-14 18:36:10
news-image

பிக்கிள் பால் விளையாட்டுப் போட்டி வீரர்களை...

2025-11-14 18:35:04
news-image

இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்...

2025-11-14 15:08:13
news-image

குழப்பகரமான சூழ்நிலைக்கு பின்னர் இலங்கை -...

2025-11-14 13:37:02
news-image

முல்லைத்தீவு உள்ளக அரங்கில் மாகாண மல்யுத்த...

2025-11-14 12:49:19
news-image

கிரிக்கெட் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்ததற்காக இலங்கைக்கு பாகிஸ்தான்...

2025-11-14 12:36:16
news-image

இந்தியாவில் கடினமான டெஸ்ட் தொடரை சந்திக்கவுள்ள...

2025-11-13 19:51:15
news-image

தங்க நாணயம் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்...

2025-11-13 18:47:21