சமூகத்தில் காணப்படும் சுயாதீன சிவில் அமைப்புகளை அரசியல்மயமாக்கும் அரசாங்கத்தின் சதியை தோற்கடிப்போம் - சஜித்

28 Jul, 2025 | 06:23 PM
image

(எம்.மனோசித்ரா)

சிவில் பாதுகாப்புக் குழுக்களின் பதவிநிலைகளையும் அங்கத்துவங்களையும் ஜே.வி.பி உறுப்பினர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து, அவற்றைப் பகிரங்கப்படுத்தி வரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த நியமனங்கள் ஜே.வி.பி. கட்சி அலுவலகங்கள் மற்றும் கட்சியின் பிரதேச பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகங்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தில் இருந்து உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் சக்தியின் பிரதேச உறுப்பினர்களுடன் சிலாபம் நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நமது நாட்டில் சட்டம் ஒழுங்கு, பொது மக்கள் பாதுகாப்பு, பொது மக்களின் உரிமைகள் மற்றும் மக்களின் சுதந்திரத்தை அடிமட்ட ரீதியிலிருந்து பாதுகாப்பதற்கும், அமைதியைப் பேணுவதற்கும் சிவில் பாதுகாப்புக் குழுக்கள்  முன்னர் செயற்பட்டு வந்தன. இந்த சிவில் பாதுகாப்புக் குழுக்கள் சமூகத் தலைமை மற்றும் சமூகத்தின் பங்கேற்புடன் முன்னெடுக்கப்பட்டு வந்ததோடு, இது ஒருபோதும் அரசியல்மயமாக்கப்படவில்லை.

கட்சி அரசியலில் ஈடுபடாதவர்களுக்கும், கட்சி அரசியலில் ஈடுபட்டவர்களுக்கும் இதன் பதவி நிலைகளும் அங்கத்துவங்களும் காணப்பட்டன. இன்று, சிவில் பாதுகாப்புக் குழுக்களின் பதவிநிலைகளையும் அங்கத்துவங்களையும் ஜே.வி.பி உறுப்பினர்களுக்குப் பகிர்ந்து கொடுத்து, அவற்றைப் பகிரங்கப்படுத்தி வரும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நியமனங்கள் ஜே.வி.பி. கட்சி அலுவலகங்கள் மற்றும் கட்சியின் பிரதேச பொது மக்கள் தொடர்பாடல் அலுவலகங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் ஏனைய தரப்பினர்கள் மீது அரசியல் அழுத்தத்தை பிரயோகிக்கும் தந்திர வேலையில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தவறான செயலாகும். அனைவரும் அடி மட்டத்தில் கிராம நகர மட்டத்தில் வலுவாக ஒருங்கிணைந்தால் இந்த சட்டவிரோத அரசியல் செயல்முறையை தடுத்து நிறுத்த முடியும். இளைஞர் கழங்கள், கிராமிய அபிவிருத்திச் சங்கங்கள், மகளிர் சங்கங்கள், ஓய்வூதிய சங்கங்கள் மற்றும் மரண சங்கங்களில் கூட இந்த தந்திர அரசியல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரசாங்கம் சிவில் சமூக அமைப்புகளை அரசியல்மயமாக்கி வருகின்றனர். அரசாங்கத்திற்கு எதிரான அடிமட்ட பொது மக்கள் அபிப்பிராயம் வலுவாகி வரும் சந்தர்ப்பத்தில் அதனை கட்டுப்படுத்த இந்த கீழ்த்தரமான முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.  முழு கிராமமும் நகரமும் இதற்கு எதிராக  நின்று எதிர்ப்பு தெரிவித்த பிரதேசங்களிலும் இடங்களிலும் இந்த அரசியல் தந்திர முயற்சிகள் தோல்வி கண்டுள்ளன.

அரசியல்வாதிகளின் அலுவலகங்கள் மூலம் பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்களை நியமிக்கும் நடவடிக்கையையும் முறையையும் நாம் தோற்கடிக்க வேண்டும். இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து வலுப்பட வேண்டும். இந்த சட்டவிரோத குழுக்களின் செல்லுபடித்தன்மையை சவாலுக்குட்படுத்த வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மின் நுகர்வோருக்காக...

2026-02-18 17:54:08
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு திருகோணமலை...

2026-02-18 17:18:51
news-image

வத்தளையில் 9,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கைப்பற்றல்

2026-02-18 17:16:06
news-image

குடும்ப தகராறு ; பிரிந்து வாழும்...

2026-02-18 16:56:26
news-image

மொட்டு கட்சியுடன் "மக்கள் குரல்" சந்திப்பு!

2026-02-18 16:50:14
news-image

மாத்தளையில் சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்:...

2026-02-18 16:29:50
news-image

அக்குரேகொட இரட்டைக்கொலை: சகோதரர்கள் விளக்கமறியலில்!

2026-02-18 16:08:54
news-image

மைத்திரி விக்ரமசிங்கவிற்கு FCID அழைப்பாணை!

2026-02-18 15:28:45
news-image

வவுனியாவில் 120 இயலாமையுடன் கூடிய பெண்களுக்கு...

2026-02-18 15:20:37
news-image

சமன் ஏக்கநாயக்கவுக்கு பிணை 

2026-02-18 15:05:54
news-image

இலங்கை மத்திய வங்கிக்கு கிறிஸ்டலினா ஜோர்ஜீவா...

2026-02-18 14:49:00
news-image

மட்டக்களப்பில் வெள்ள அபாயம்

2026-02-18 14:41:45