கால பைரவரின் அருளைப் பெறுவதற்கான சூட்சம குறிப்பு..!?

Published By: Digital Desk 2

28 Jul, 2025 | 05:35 PM
image

நீங்கள் இந்தப் பிறவியில் பெறவேண்டிய சுப பலன்கள் பெறாமல்.. கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறீர்கள் என்றால் எம்முடைய முன்னோர்கள் குறிப்பிட்ட வகையில் கால பைரவரை வணங்கினால் பலன் கிடைக்க தொடங்கும் என குறிப்பிடுகிறார்கள்.

கால பைரவர் எமக்கு இந்த பிறவியில் கிடைக்க வேண்டிய நல்ல பலன்களை விரைவாகவும் , நிறைவாகவும் தருவதில் அக்கறை காட்டுபவர் சனி பகவான் . ஆனால் நீங்கள் கடந்த பிறவியில் ஏதேனும் தவறு செய்து அதன் தண்டனையாக இந்த பிறப்பில் பிறந்திருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு சனி பகவானின் கருணை பார்வை கிடைப்பதில் சங்கடம் நீடிக்கும். இந்த தருணத்தில் சனி பகவானை ப்ரீத்தி செய்ய வேண்டும். ஏனென்றால் அவரின் குருவான கால பைரவரை உறுதியாக பற்ற வேண்டும்.

கால பைரவர் வழிபாடு என்பது விசேடமானது. அபூர்வமானது. ஆனால் பலன்களை உறுதியாக வழங்குவார். கால பைரவர் சன்னதி கொண்டு எழுந்தருளும் ஆலயத்தை தெரிவு செய்து கொண்டு சனிக்கிழமைகளில் கால பைரவருக்கு பிடித்த செவ்வாழை மற்றும் மாதுளம் பழத்தை அவருக்கு நிவேதனமாக படைத்து உங்களது நட்சத்திரம் அவருடைய உடலில் எந்த பகுதியாக திகழ்கிறதோ..! அந்த பகுதியை உற்று அவதானித்து பிரார்த்தனையை மேற்கொள்ள வேண்டும்.

கால பைரவரை வணங்கினால் அதிலும் குறிப்பாக மேலே விவரிக்கப்பட்ட பழங்களை நிவேதனமாக படைத்து வழிபட்டால் , உங்களுக்கு இந்த பிறவியில் கிடைக்க வேண்டிய சுப பலன்கள் விரைவில் கிடைக்கும் என்பது திண்ணம்.

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிலில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக வழிபாடு!

2026-07-13 17:20:07
news-image

கர்மா தொடர்பான கெடுபலன் குறைவதற்கான எளிய...

2026-07-11 16:58:36
news-image

தடையற்ற வருவாய் கிடைப்பதற்கான எளிய வழிமுறை..!

2026-07-10 15:21:24
news-image

நினைத்ததை சாதிக்கும் வல்லமை வழங்கும் சூட்சம...

2026-07-09 18:36:55
news-image

அரசாங்க பணி கிடைப்பதற்கான சூட்சம வழிபாடு..!?

2026-07-08 14:58:00
news-image

வாராகி அம்மனுக்குரிய பிரத்யேக தீப வழிபாடு

2026-07-07 17:13:45
news-image

தொழிலில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!

2026-07-06 15:19:29
news-image

வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்பட மேற்கொள்ள வேண்டிய...

2026-07-04 13:42:37
news-image

திருமண தடையை நீக்கும் பிரத்யேக வழிமுறை

2026-07-03 16:32:29
news-image

குரு பகவானின் தோஷம் நீக்குவதற்கான எளிய...

2026-07-02 17:50:01
news-image

பிறந்த பிள்ளைக்கு ஜாதகம் எப்போது எழுத...

2026-07-01 16:04:37
news-image

தொழிலில் முன்னேற்றம் கிடைப்பதற்கான பிரத்யேக வழிமுறை!

2026-06-30 17:14:14