இலங்கை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ஜப்பான் சமுத்திர ஸ்வயங் பாதுகாப்பு பிரிவிற்கு சொந்தமான இசுமோ,சசனம் என பெயரிடப்பட்ட இரு கப்பல்களையும் இலங்கை கடற்படையினர் வரவேற்றனர்.

குறித்த இரு கப்பல்களில் இசுமோ என பெயரிடப்பட்ட கப்பலானது 248 மீட்டர் நீளமும் 38 மீட்டர் அகலமுடையது. இதில் 970 பயணிகள் பயனிக்கும் வசதியை கொண்டது.

மேலும் சசனம் எனும் கப்பல் 151 மீற்றர் நீளமும் 17.4 மீற்றர் அகலமுடையது. இதில் 175 பயணிகள் பயனிக்கும் வசதியை கொண்டது.

மூன்று நாட்களை கொண்ட இப் பயணம் ஜப்பான் மற்றும் இலங்கைக்கு இடையிலான நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்குடையது என கடற்படை பேச்சாளர் ஊடகங்களுக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.