இன்றைய திகதியில் எம்மில் பலரும் முதுமையான பிறகும் பணியாற்ற வேண்டிய கட்டாய சூழல் இருப்பதால் தங்களின் தோற்றம் பொலிவாக இருக்க வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்துகிறார்கள்.
அதே தருணத்தில் இளம் பெண்களும், பெண்மணிகளும் தங்களது தோற்றம் தான் தன்னம்பிக்கையை ஏற்படுத்துகிறது என விவரித்து, தோற்றப் பொலிவில் தனி கவனம் செலுத்துகிறார்கள்.
இதனால் இவர்களது தோற்றத்தில் குறிப்பாக முகத்தில் ஏதேனும் முதுமையின் காரணமான சுருக்கங்கள் ஏற்பட்டால் அதனை களைவதற்கான சரும நிரப்பிகளை பாவிக்கிறார்கள். இந்நிலையில் இது போன்ற சரும நிரப்பிகளை பயனாளிகள் பாவிக்கும்போது எச்சரிக்கை தேவை என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
முகத்தில் சுருக்கம் ஏற்பட்டாலோ குறிப்பாக கண், மூக்கு, கன்னம், உதடு போன்ற பகுதிகளில் விவரிக்க இயலாத காரணங்களால் அதன் இயல்பு தன்மையில் மாற்றம் ஏற்பட்டாலோ அல்லது அவலட்சணமாக தோன்றுகிறது என்ற நிலை ஏற்பட்டாலோ உடனடியாக அழகியல் சார்ந்த தோல் மருத்துவர் நிபுணர்களை சந்தித்து ஆலோசனை பெறுகிறார்கள்.
இவர்களுக்கு வைத்திய நிபுணர்கள் சத்திர சிகிச்சையற்ற சரும நிரப்பி சிகிச்சைகளை வழங்கி நிவாரணம் அளிக்கிறார்கள். இத்தகைய சரும நிரப்பிகள் மூலமாக மேற்கொள்ளப்படும் சிகிச்சை அவர்களது தோற்ற பொலிவில் இயல்பு நிலையை ஓரளவிற்கு மீட்டெடுக்கிறது. இத்தகைய தருணங்களில் வைத்தியர்கள் உங்களது தோலின் கீழ்ப்பகுதியில் மட்டுமே உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தாத - பக்க விளைவை குறைவாக ஏற்படுத்துகின்ற சரும நிரப்பிகளை பாவிக்கிறார்கள். இத்தகைய சிகிச்சை பெரும்பாலும் முப்பது நிமிடங்களில் நிறைவு பெறுகிறது. ஆனால் இதற்கான பலன் உடனடியாக கிடைக்கிறது . ஆனாலும் நீங்கள் சரும நிரப்பிகளை எந்த காரணத்திற்காக முகத்தில் எந்தப் பகுதியில் மேற்கொண்டீர்கள் என்பதை பொறுத்து அதன் ஆயுளும், பலனும் தீர்மானிக்கப்படுகிறது.
அதே தருணத்தில் சரும நிரப்பிகளில் பல வகைகள் உள்ளன. உங்களுடைய தோலுக்கும், உங்களுடைய எதிர்பார்ப்பிற்கும் பொருத்தமான சரும நிரப்பிகளை வைத்தியர்கள் துல்லியமாக அவதானித்து பாவிக்கிறார்கள்.
பொதுவாகவே நீங்கள் முதுமை அடையும் போது உங்களுடைய சருமத்தை பொலிவாக வைத்திருக்கும் கொலாஜன் எனும் பொருளின் உற்பத்தி குறையத் தொடங்குகிறது. இதனால் தான் தோல் தளர்ச்சி அடைகிறது. அத்துடன் அதன் இயல்பு தன்மையையும் தொலைக்கிறது. சிலருக்கு இத்தகைய தருணத்தில் தோல் மெலிந்து அதன் நெகிழ்ச்சித்தன்மையை இழந்து தொய்வடைய தொடங்குகிறது. இதிலிருந்து நிவாரணம் கிடைப்பதற்காகவே வைத்தியர்கள் சரும நிரப்பிகளை பயன்படுத்தி சிகிச்சை அளிக்கிறார்கள்.
பெரும்பாலானவர்களுக்கு இவை நல்ல பலனையே வழங்கினாலும் வெகு சிலருக்கு எதிர்பாராத பக்க விளைவை ஏற்படுகிறது. குறிப்பாக தோற்றத்தில் சமச்சீரற்ற நிலை, சரும நிரப்பிகளை செலுத்திக் கொள்ளும் இடத்தில் ரத்தப்போக்கு, அப்பகுதி சிவந்து போதல், வலி, வீக்கம், சருமம் சேதமடைதல் ... போன்ற பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். சிலருக்கு அரிதாக அப்பகுதியில் உணர்வின்மை நிலை கூட ஏற்படக்கூடும். இதனால் இத்தகைய சிகிச்சையை மேற்கொள்ளும் போது வைத்தியர்களின் அனுபவத்தையும், அவர்களின் வெற்றி வீதத்தையும் மதிப்பிட்டு, அதன் பிறகு சிகிச்சையை பெற வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள்.
வைத்தியர் கௌரிசங்கர்
தொகுப்பு அனுஷா.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM