(நெவில் அன்தனி)
ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 9ஆம் திகதியிலிருந்து 28ஆம் திகதிவரை ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்த ஆசிய கிரிக்கெட் பேரவை தீர்மானித்துள்ளது.
இம் முறை துபாய் மற்றும் அபுதாபி விளையாட்டரங்குகளில் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படும்.
இந்தியாவிலும் இலங்கையிலும் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறவிருப்பதால் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ரி20 கிரிக்கெட் போட்டியாக நடத்தப்படவுள்ளது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் வழமையாக ஆறு நாடுகளே பங்குபற்றிவந்துள்ளன. ஆனால், இம்முறை பங்குபற்றும் நாடுகளின் எண்ணிக்கை எட்டாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஆசிய கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.
இதற்கு அமைய இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், ஹொங்கொங், ஓமான் ஆகிய எட்டு நாடுகள் இரண்டு குழுக்களில் பங்குபற்றவுள்ளன.
இப் போட்டிக்கான பி குழுவில் பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், ஹொங்கொங் ஆகிய நாடுகளுடன் முன்னாள் சம்பியன் இலங்கை இடம்பெறுகிறது.
இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் பங்களாதேஷை செப்டெம்பர் 13ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் போன்ற போட்டித்தன்மை இப்போது இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் ஏற்பட்டுள்ளதால் இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான பி குழு போட்டி முக்கியம் வாய்ந்ததாகவும் விறுவிறுப்பானதாகவும் அமையவுள்ளது.
இலங்கை தனது இரண்டாவது போட்டியில் ஹொங்கொங்கை செப்டெம்பர் 15ஆம் திகதியும் கடைசிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை செப்டெம்பர் 18ஆம் திகதியும் எதிர்த்தாடும்.
ஒரே குழுவில் இந்தியா - பாகிஸ்தான்
ஆசிய கிண்ண ரி20 கிரிக்கெட் போட்டியில் பரம வைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் ஏ குழுவில் இடம்பெறுவதன் மூலம் கிரிக்கெட் அரங்கில் மற்றொரு மகத்தான போட்டி ஒன்று காத்திருக்கிறது.
இந்த இரண்டு அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செப்டெம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்தியா, பாகிஸ்தானுடன் ஏ குழுவில் ஐக்கிய அரபு இராச்சியம், ஓமான் ஆகிய அணிகளும் இடம்பெறுகின்றன.
இரண்டு குழுக்களில் நடத்தப்படும் முதலாம் சுற்று லீக் போட்டிகள் செப்டெம்பர் 19ஆம் திகதி நிறைவுபெறும்.
லீக் சுற்று முடிவில் இரண்டு குழுக்களிலும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் சுப்பர் 4 சுற்றில் ஒன்றை ஒன்று எதிர்த்தாடும்.
சுப்பர் 4 சுற்று முடிவில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் ஆசிய சம்பியனைத் தீர்மானிக்கும் இறுதிப் போட்டியில் செப்டெம்பர் 28ஆம் திகதி மோதும்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM