(நெவில் அன்தனி)
ஹொங்கொங் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநராக இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் கௌஷல்ய சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஹொங்கொங் பங்குபற்றவுள்ள நிலையில் அதன் தலைமைப் பயிற்றுநராக கௌஷல்ய சில்வாவை அந் நாட்டு கிரிக்கெட் நிறுவனம் நியமித்துள்ளது.
ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் பி குழுவில் ஹொங்கொங் இடம்பெறுகிறது.
சிங்கப்பூரில் அண்மையில் நடைபெற்ற ஆசிய பசுபிக் கிரிக்கெட் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் இறுதிப் போட்டியில் மலேசியாவிடம் ஹொங்கொங் தோல்வி அடைந்திருந்தது.
இதனை அடுத்து அணியைக் கட்டியெழுப்பும் நோக்கத்துடன் கௌஷல்ய சில்வாவை தலைமைப் பயிற்றுநராக ஹொங்கொங் கிரிக்கெட் நிறுவனம் நியமித்துள்ளது.
கல்கிஸ்ஸை பரிசுத்த தோமையார் கல்லூரியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான கௌஷல்ய சில்வா, 2011ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டெஸ்ட் அறிமுகம் பெற்றார்.
39 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய கௌஷல்ய சில்வா, 3 சதங்கள், 12 அரைச் சதங்களுடன் 2099 ஓட்டங்களைப் பெற்றார்.
இங்கிலாந்துக்கு எதிராக பல்லேகலையில் 2018ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து கௌஷல்ய சில்வா ஓய்வுபெற்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM