உலக பல்கலைக்கழக விளையாட்டு விழா 2025: ஆறு நாட்களில் இரண்டு தேசிய சாதனைகளை நிலைநாட்டிய ரசாரா விஜேசூரிய

28 Jul, 2025 | 12:57 PM
image

(நெவில் அன்தனி)

ஜேர்மனியின் பேர்லினில் அமைந்துள்ள ரைன் ரூர் விளையாட்டரங்கில் நடைபெற்ற உலக பல்கலைக்கழக விளையாட்டு விழாவில் பெண்களுக்கான நெடுந்தூர ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றிய களனி பல்கலைக்கழக மாணவி ரசாரா விஜேசூரிய ஆறு நாட்கள் இடைவெளியில் இரண்டு தேசிய சாதனைகளை நிலைநாட்டி வரலாறு படைத்துள்ளார்.

பெண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டப் போட்டியில் தனது சொந்த தேசிய சாதனையை கடந்த 21ஆம் திகதி முறியடித்து புதிய தேசிய சாதனை நிலைநாட்டிய ரசாரா, ஐந்து தினங்கள் கழித்து கடந்த 26ஆம் திகதி   நடைபெற்ற  50000 மீற்றர் ஓட்டப் போட்டியில் கயன்திகா அபேரட்னவுக்கு சொந்தமாக இருந்த தேசிய சாதனையை முறியடித்து இலங்கையின் புதிய நெடுந்தூர ஓட்ட நாயகி ஆனார்.

இந்த இரண்டு நெடுந்தூர ஓட்டப் போட்டிகளிலும் ரசாராவினால் பதக்கங்கள் பெற முடியாவிட்டாலும் பிரசித்திபெற்ற ஐரோப்பிய, ஆபிரிக்க வீராங்கனைகளுடன் போட்டியிட்டதன் மூலம் சிறந்த அனுபவத்தைப் பெற்றுக்கொண்டார்.

ரைன் ரூர் விளையாட்டரங்கில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் 12.20 மணிக்கு ஆரம்பமான பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியை 15 நிமிடங்கள், 52.60 செக்கன்களில் ஓடி முடித்த ரசாரா விஜேசூரிய, 2021இல் கயன்திகா அபேரட்னவினால் நிலைநாட்டப்பட்ட 15 நிமிடங்கள், 55.84 செக்கன்கள் என்ற தேசிய  சாதனையை  முறியடித்து புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினார்.

இதேவேளை, கடந்த வாரம் நடைபெற்ற பெண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டப் போட்டியை 32 நிமிடங்கள் 28.02 செக்கன்களில் நிறைவுசெய்த ரசாரா விஜேசூரிய அப் போட்டியிலும் புதிய தேசிய சாதனையை நிலைநாட்டினார்.

அப் போட்டியில் அவர் 8ஆம் இடத்தையே பெற்றார்.

தென் கொரியாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில்  பெண்களுக்கான  10000 மீற்றர் ஓட்டப் போட்டியை 33 நிமிடங்கள், 21.26 செக்கன்களில் நிறைவுசெய்து தனது முந்தைய தேசிய சாதனையை (33:39.10)  ரசாரா விஜேசூரிய  புதுப்பித்திருந்தார். இப்போது அந்த சாதனையையும் ரசாரா புத்துப்பித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'எல்லா புகழும் என் தந்தைக்கே, அவர்...

2025-11-15 19:29:40
news-image

துடுப்பாட்டத்தில் இந்தியாவும் தடுமாறிய முதல் டெஸ்டில்...

2025-11-15 17:51:50
news-image

பாபர் அஸாம் சதம், ஸமான், ரிஸ்வான்...

2025-11-15 10:42:20
news-image

பாகிஸ்தானுடனான 2ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில்...

2025-11-14 19:27:42
news-image

பும்ராவின் 5 விக்கெட் குவியலின் பலனாக...

2025-11-14 18:36:10
news-image

பிக்கிள் பால் விளையாட்டுப் போட்டி வீரர்களை...

2025-11-14 18:35:04
news-image

இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்...

2025-11-14 15:08:13
news-image

குழப்பகரமான சூழ்நிலைக்கு பின்னர் இலங்கை -...

2025-11-14 13:37:02
news-image

முல்லைத்தீவு உள்ளக அரங்கில் மாகாண மல்யுத்த...

2025-11-14 12:49:19
news-image

கிரிக்கெட் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்ததற்காக இலங்கைக்கு பாகிஸ்தான்...

2025-11-14 12:36:16
news-image

இந்தியாவில் கடினமான டெஸ்ட் தொடரை சந்திக்கவுள்ள...

2025-11-13 19:51:15
news-image

தங்க நாணயம் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்...

2025-11-13 18:47:21