நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் நாளைய தினம் செவ்வாய்க்கிழமை (29) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில், கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை சம்பிரதாயபூர்வமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆலய பிரதம குருக்களிடம் இன்றைய தினம் திங்கட்கிழமை (28) கையளிக்கப்பட்டது.
செங்குந்தர் பரம்பரையினரால் நல்லூர் ஆலயக் கொடியேற்றத்துக்கான கொடிச்சீலை சம்பிரதாயபூர்வமாக ஆலயத்தில் ஒப்படைக்கப்படுவது பாரம்பரிய வழக்கமாகும்.


அதன்படி, யாழ். சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில் உள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இன்று நடைபெற்ற விஷேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து, அங்கிருந்து சிறிய தேர் ஒன்றில் கொடிச்சீலை பருத்தித்துறை வீதியூடாக எடுத்துச் செல்லப்பட்டு, அத்தேர் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தினை சென்றடைந்ததன் பின்னர், நல்லூர் ஆலய பிரதம குருக்களிடம் கொடிச்சீலை வழங்கப்பட்டது.
நல்லூர் ஆலய மகோற்சவம் நாளை காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, தொடர்ந்து 25 நாட்களுக்கு மகோற்சவ திருவிழாக்கள் நடைபெறும்.
மகோற்சவ திருவிழாக்களின் 10ஆம் திருவிழாவான மஞ்ச திருவிழா எதிர்வரும் 7ஆம் திகதியும், 22ஆம் திருவிழாவான மாம்பழ திருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 19ஆம் திகதியும், 24ஆம் திருவிழாவான தேர்த் திருவிழா ஆகஸ்ட் 21ஆம் திகதி காலையும், தீர்த்தத் திருவிழா மறுநாள் 22ஆம் திகதி காலை நடத்தப்பட்டு, அன்றைய தினம் மாலை கொடியிறக்கத்துடன் மகோற்சவ திருவிழாக்கள் நிறைவு பெறும்.





















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM