கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத் திருப்பணியில் வாழ்நாள் சேவையாற்றிய, "திருச்சரியைத் தொண்டர்" என்ற பட்டத்தைப் பெற்ற ந.தங்கவேலு தனது 88வது வயதில் இன்று திங்கட்கிழமை (28) இறைபதம் அடைந்தார்.
அவரது மறைவுக்கு கம்பளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான பரிபாலன சபையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சபையினரின் இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
யாமறிந்த காலம் முதல் தொட்டு எமது தேவஸ்தானத்தில் நீண்ட காலம் இறைப்பணி ஆற்றிய திருப்பணித் தொண்டர் இவரே என மொழிந்தால் மிகப் பொருத்தமாக இருக்கும். இவரின் சேவையைப் பாராட்டி 1998ஆம் ஆண்டில் அருள்மிகு கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான பரிபாலன சபையினர் சார்பாகவும், கம்பளை வாழ் அம்பிகை அடியார்கள் சார்பாகவும் அன்னாருக்கு "திருச்சரியைத் தொண்டர்" என்ற தகைசால் பட்டத்தினை வழங்கி கௌரவம் ஆற்றியதை பெரும் பாக்கியமாகக் கருதுகிறோம்.
எமது ஆலயத்தில் இவர் கௌரவ ஆலோசகராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.
தன் வாழ்வில் எந்நிலையில் இருப்பினும், இன்று வரை ஒரு சராசரி மனிதராக, எளிமை மிக்கவராக, பழையனவற்றை மறக்கும் நிலையற்றவராக, அனைவரிடமும் அன்பு பண்பும் கொண்ட மாமனிதராகவே இவரை நான் காண்கின்றேன்.
ஒருவர் எவ்வளவு பெரிய உயரிய பட்டப்படிப்புகள் கற்ற புத்திஜீவியாகவோ, கல்விமானாகவோ இருப்பினும் அரிச்சுவடி எனும் அகரத்தை போதித்த ஆசானே ஆதி கடவுளாவான்.
அவ்வகையில் கம்பளை நகர் மற்றும் அதனைச் சார்ந்த புற நகரங்களில் இருக்கும் அனேகர்களுக்கு அகரத்தை போதித்த ஆசானாக விளங்கியவர் திரு:ந.தங்கவேலு மாஸ்டர் ஜயா அவர்கள்.
பல சமூக, இறைபணி சேவைகளிலும் அன்னாரின் குடும்பம் சிறந்த பங்களிப்புகளை வழங்கியுள்ளமை சிறப்பிற்குரிய விடயம்.
நம் அனைவர் அகங்களில் நீக்கமற என்றென்றும் வாழும் திரு.ந.தங்கவேல் மாஸ்டர் ஐயா அவர்கள் கம்பளை மண்ணில் பேரோடும் பெரும் புகழோடும் வரலாறு படைத்த மாமனிதராகவே கருதுகிறேன். பெருந்தகை திரு.ந.தங்கவேலு மாஸ்டர் ஐயா அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம். அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தருக்கு எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM