(நெவில் அன்தனி)
மென்செஸ்டர், ஓல்ட் ட்ரஃபர்ட் விளையாட்டரங்கில் நடைபெற்ற இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நான்காவது அண்டர்சன் - டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஞாயிறன்று (28) வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தது.
எனினும், ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மேலும் ஒரு போட்டி மீதம் இருக்க இங்கிலாந்து 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது.

போட்டியின் நான்காம் நாளன்று இங்கிலாந்து பலமான நிலையில் இருந்தபோதிலும் கடைசி நாளன்று ஷுப்மான் கில், ரவிந்த்ர ஜடேஜா, வொஷிங்டன் சுந்தர் ஆகியோர் குவித்த சதங்கள், கே.எல். ராகுல் பெற்ற அரைச் சதம் என்பன போட்டியை வெற்றிதோல்வியின்றி முடிவடைய செய்தன.
போட்டியின் கடைசி நாளான இன்றைய தினம் தனது 2ஆவது இன்னிங்ஸை 137 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தவாறு 2 விக்கெட் இழப்புக்கு 174 ஓட்டங்களிலிருந்து இந்தியா தொடர்ந்தது. இந்தியா சார்பாக 3ஆவது வீரராக வொஷிங்டன் சுந்தர் சதம் குவித்ததும் ஆட்டத்தை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொள்ள இரண்டு அணியினரும் தீர்மானித்தனர்.
ஆட்டம் முடிவுக்கு வந்தபோது இந்தியா 4 விக்கெட்களை இழந்து 425 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
கடைசி நாளன்று தங்களது துடுப்பாட்டங்களைத் தொடர்ந்த ஷுப்மான் கில், கே.எல். ராகுல் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 188 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ராகுல் 90 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.
மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடி இந்தத் தொடரில் தனது நான்காவது சதத்தைக் குவித்த ஷுப்மான் கில் 103 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.
இந் நிலையில் பகல்போசன இடைவேளைக்கு சற்று நேரம் இருந்தபோது ஜோடி சேர்ந்த ரவிந்த்ர ஜடேஜா, வொஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் மிகச் சிறப்பாகத் துடுப்பெடுத்தாடி இங்கிலாந்து மண்ணில் தங்களது முதலாவது சதங்களைக் குவித்து ஆட்டத்தை வெற்றிதோலவியின்றி முடிக்க உதவினர்.

அவர்கள் இருவரும் 55 ஓவர்கள் ஜோடி சேர்ந்து துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 203 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
ரவிந்த்ர ஜடேஜா 185 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 107 ஓட்டங்களுடனும் வொஷிங்டன் சுந்தர் 206 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 101 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
இந்தப் போட்டியின் கடைசி மணித்தியாலத்தில் வீசப்படவேண்டிய கட்டாய 15 ஓவர்கள் ஆரம்பித்தபோது, ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் எண்ணத்தில் ஜடேஜாவுக்கு கைலாகு கொடுக்க பென் ஸ்டோக்ஸ் முற்பட்டார். ஆனால், அதனை ஜடேஜா கருத்தில் கொள்ளாததுடன் கைலாகு கொடுக்கவும் விரும்பவில்லை.


அந்த சந்தர்ப்பத்தில் ஜடேஜாவும் சுந்தரும் சதங்களை நெருங்கிக்கொண்டிருந்ததால் ஆட்டத்தைத் தொடர விரும்பினர்.
இதன் காரணமாக ஆட்டம் தொடர்ந்ததுடன் ஜடேஜாவைத் தொடர்ந்து வொஷிங்டன் சுந்தர் சதத்தைப் பூர்த்திசெய்ததும் ஆட்டம் வேற்றிதோல்வியின்றி முடிவுக்கு வந்தது.
இந்த டெஸ்ட் தொடரில் ஒரு விசேடம் என்னவென்றால், இதுவரை நடந்து முடிந்த 4 டெஸ்ட்களிலும் சதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாகும்.
இதுவரை இந்தத் தொடரில் மொத்தமாக 17 சதங்கள் குவிக்கப்பட்டுள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியில் சகலதுறைகளிலும் பிரகாசித்த பென் ஸ்டோக்ஸ் இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக ஆட்ட நாயகனானார்.
எண்ணிக்கை சுருக்கம்
இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 358 (சாய் சுதர்சன் 61, யஷஸ்வி ஜய்ஸ்வால் 58, ரிஷாப் பான்ட் 54, கே.எல். ராகுல் 46, ஷர்துல் தாகூர் 41, பென் ஸ்டோக்ஸ் 72 - 5 விக்., ஜொவ்ரா ஆச்சர் 73 - 3 விக்.)
இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 669 (ஜோ ரூட் 150, பென் ஸ்டோக்ஸ் 141, பென் டக்கெட் 94, ஸக் க்ரோவ்லி 84, ப்றைடன் கார்ஸ் 47, ரவிந்த்ர ஜடேஜா 143 - 4 விக்., வொஷிங்டன் சுந்தர் 107 - 2 விக்., ஜஸ்ப்ரிட் பும்ரா 112 - 2 விக்.)
இந்தியா 2ஆவது இன்: ஆட்டம் வெற்றிதோல்வியின்றி முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது 425 - 4 விக். (ரவிந்த்ர ஜடேஜா 107 ஆ.இ., ஷுப்மான் கில் 103, வொஷிங்டன் சுந்தர் 101 ஆ.இ., கே.எல். ராகுல் 90, கிறிஸ் வோக்ஸ் 67 - 2 விக்.)















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM