இந்திய இலங்கை உணவுப் பண்பாட்டு பண்டிகைத் திருவிழா

Published By: Digital Desk 2

27 Jul, 2025 | 04:07 PM
image

இலங்கையில் உள்ள மாகாணங்களுக்கிடையே  மட்டுமல்லாமல் இந்தியா இலங்கை இரு நாடுகளுக்கிடையிலான சுற்றுலா துறை மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியா–இலங்கை உணவுப் பண்பாட்டு பண்டிகைத் திருவிழா கண்டி சஹஸ் உயன மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வு, கண்டி உதவி இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் கண்டி மாவட்ட ஹொட்டல் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. விழாவில் இந்திய தூதுவர் வி.எஸ். சரண்யா தலைமையிலான குழு முன்னிலை வகித்தது.

விழாவின் பிரதம அதிதியாக வட மேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ குமார ஸ்ரீ வர்ண சூரிய கலந்து கொண்டு சிறப்பித்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் தெரிவித்ததாவது,

"இந்த உணவுப் பண்பாட்டு திருவிழா, இரு நாடுகளுக்கிடையிலான கலாச்சார புரிதலையும், நட்புறவையும் வலுப்படுத்தும் வகையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். இது சுற்றுலா துறைக்கும் மேலும் நன்மை பயக்கும்." என்றார்.

இந் நிகழ்வில், குருநாகல் மாநகர பிரதி முதல்வர்,மத்திய மாகாண பிரதான செயலாளர் ஜி. எச். எம். ஏ. பிரேமசிங்க, செயலாளர் இந்திக உடத்த, கண்டி மாவட்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் சுகத் மாசிங்க, கண்டி தமிழ் வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

திருவிழாவின் போது, இந்தியா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் பொதுவான மற்றும் தனித்துவமான கலாச்சார சமையல் முறை, போசாக்கு உணவுகள், பிரபலமான பானங்கள், புத்துணர்ச்சி தரும் உணவுகள் ஆகியவை காட்சிக்காகவும், நுகர்வோர்களுக்காகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைத் தமிழ் கலைஞர் சங்க உறுப்பினர்களுக்கு...

2026-08-08 14:48:42
news-image

கொழும்பு, கொம்பனி தெரு சிவசுப்பிரமணிய சுவாமி...

2026-08-07 19:38:40
news-image

இலங்கை வங்கியின் 87 ஆவது அகவை...

2026-08-07 17:09:47
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய மஹோற்சவம்: கொடிச்சீலை...

2026-08-07 12:41:31
news-image

காண்பிய விரிப்புக் கண்டது நல்லூரான் வடக்கு...

2026-08-06 16:52:31
news-image

இந்தியாவின் 80ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு...

2026-08-05 17:39:35
news-image

கொழும்பில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் "யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்" தினம்...

2026-08-05 15:17:42
news-image

வவுனியாவில் சர்வதேச சகோதரிகள் தினம்!

2026-08-04 13:31:15
news-image

மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலய மகோற்சவப்...

2026-08-03 17:38:15
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 'வடக்கு வாசல்...

2026-08-03 10:21:32
news-image

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார்...

2026-08-03 10:30:28
news-image

மலையக எழுத்தாளர் கந்தையா கணேசமூர்த்தியின் சுக்கிலபட்சம்...

2026-08-02 17:17:54