கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹந்தான பகுதியில் கடந்த 25 ஆம் திகதி பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் சாரதியை தாக்கிய சம்பவம் தொடர்பாக பெண்ணொருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை நேற்று சனிக்கிழமை (26) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கண்டி பகுதியைச் சேர்ந்த 21, 26 மற்றும் 27 வயதுடையவர்கள் எனவும் கைது செய்யப்பட்ட பெண் சந்தேக நபர் 38 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் நேற்றையதினம் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், பெண் சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டதோடு, மேலும் மூன்று சந்தேக நபர்கள் நாளை திங்கட்கிழமை (28) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM