கொட்டகலை ரொசிட்ட பகுதியிலுள்ள ஆற்றிலிருந்து சிறுமி சடலமாக மீட்பு!

27 Jul, 2025 | 10:11 AM
image

பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெவோன் நீர் வீழ்ச்சிக்கு நீர் ஏந்தி செல்லும் கொட்டகலை ரொசிட்ட பகுதியில் உள்ள ஆற்றிலிருந்து நான்கு வயது சிறுமி (26) சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருமண நிகழ்வுக்கு செல்லவிருந்த வேளை தனது மகளை தயார் நிலையில் வைத்துவிட்டு சிறுமியின் தாய் தயாராகிக் கொண்டிருந்த போது குறித்த சிறுமி வீட்டின் அருகாமையில் இருந்த ஆற்றில் தவறுதலாக விழுந்து நீரில் அடித்துச் சென்றதாக கூறப்படுகிறது.

பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்து குறித்த சிறுமியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது, சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு பின்னர் அவர் சடலமாக மீட்கப்பட்டு கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவித்தனர்.

சடலமாக மீடகப்பட்ட சிறுமி கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தை சேர்ந்த நான்கு வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக திம்புள்ள - பத்தனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க அபின் மற்றும்...

2026-07-14 16:58:44
news-image

அரசியலமைப்புடன் விளையாடுவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல்;...

2026-07-14 15:42:45
news-image

நீதித்துறையை ஆக்கிரமித்து எதிர்க்கட்சிகளை முடக்க அரசு...

2026-07-14 17:44:19
news-image

அரசை விமர்சித்து சரியான பாதைக்கு திருப்புவோம்;...

2026-07-14 14:22:50
news-image

204 மில்லியன் பெறுமதியான அதிநவீன ஆய்வக...

2026-07-14 14:27:28
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்துக்கு பரிந்துரைகள் அமுல்படுத்தாததே...

2026-07-14 14:35:40
news-image

இலங்கை மற்றும் தான்சானியாவின் நீரியல் வளர்ப்புத்...

2026-07-14 22:02:43
news-image

முன்னாள் கட்டார் நாட்டின் தலைவரின் இறுதிச்சடங்கில்...

2026-07-14 21:57:06
news-image

விவசாயிகளுக்கு சலுகைக் கடன் வழங்க புதிய...

2026-07-14 18:25:14
news-image

ஜே.வி.பி அரசாங்கத்தின் போலித்தனம் அம்பலம் ;...

2026-07-14 18:26:52
news-image

உளவுத்துறை மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலேயே பிரமுகர்...

2026-07-14 18:25:38
news-image

புதிய தமிழ் - முஸ்லிம் கட்சிகளின்...

2026-07-14 18:24:09