அதிக மதுபோதையில் தன் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோம் செய்த தந்தைக்கு 16 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து மாத்தறை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அக்குரஸ்ஸ பிரதேசத்தில் நடந்த குறித்த குற்றச்செயலுக்கு 16 வருடங்களுக்கு பின் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், அதனை செலுத்த தவறினால் மேலும் 6 வருடங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மகளுக்கு 2 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குமாறும், அவ்வாறு வழங்காவிடின் மேலும் ஒரு வருட சிறைத்தண்டனை அனுபவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தண்டனை வழங்கப்பட்டுள்ள தந்தைக்கு தற்போது 65 வயது என்பது குறிப்பிடத்தக்கது.