இன்றைய சூழலில் அறுபது வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கு நினைவு திறன் இழப்பு பாதிப்பு ஏற்படுவது என்பது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இதனை தொடக்க நிலையிலே கண்டறிந்து சிகிச்சை வழங்கி, நிவாரணம் அளிக்க முடியும் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
பொதுவாக முதுமை வயதை எட்டி விட்டால்.. அவர்களின் நினைவுத்திறன் தொடர்பான மற்றும் மூளை தொடர்பான நரம்பியல் மண்டலங்கள் மற்றும் அதன் செயல்பாட்டில் தடுமாற்றமும், தாமதமும் ஏற்படும். இதன் காரணமாக சிலருக்கு நினைவுத்திறன் கடுமையாகவோ அல்லது மிதமாகவோ பாதிக்கக்கூடும். அதில் அல்சைமர் என குறிப்பிடப்படும் ஒரு பாதிப்பும் உண்டு. இதனை மருத்துவ மொழியில் நியூரோடீஜெனரேடிவ் டிஸ்ஸார்டர் என குறிப்பிடுவார்கள். இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு வீட்டில் இருந்தாலும் எந்த அறையில் இருக்கிறோம் என்பதனை மறந்து விடுவார்கள். அத்துடன் கழிவறை செல்வது எப்படி? என்பதும், எங்கு சிறுநீர் மற்றும் மலத்தை கழிக்க வேண்டும் என்பதையும் மறந்து விடுவார்கள். இது இந்த நோயின் தீவிரமான அறிகுறியாகும்.
தற்போது இத்தகைய பாதிப்பு உள்ளவர்களுக்கும் கூட ஸ்கேன் பரிசோதனை மூலம் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அறிந்து அதற்குரிய நிவாரண சிகிச்சையை வழங்குகிறார்கள். குறிப்பாக இவர்களுக்கு சப்டூரல் ஹெமடோமா என்ற பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும். வேறு சிலருக்கு மூளையில் உள்ள ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம். இதனை மருத்துவ மொழியில் க்ரானிக் சப்டூரல் ஹெமடோமா எனக் குறிப்பிடுகிறார்கள். இத்தகைய தருணத்தில் பிரத்யேக சத்திர சிகிச்சை மூலம் அப்பகுதியை சீரமைத்தால்.. மீண்டும் அவர்களுக்கு நினைவுத்திறன் ஏற்படும்.
வேறு சிலருக்கு நார்மல் பிரஷர் ஹைட்ரோசெலபஸ் என்ற பாதிப்பும் ஏற்பட்டிருக்க கூடும். இவர்களுடைய அறிகுறியும் டிமென்சியா எனப்படும் நினைவுத்திறன் இழப்பின் அறிகுறியாகும். இவர்களுக்கும் ஸ்கேன் பரிசோதனை மூலம் பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்க இயலும். இவர்களுக்கு மூளையில் உள்ள வென்ட்ரிக்கிள் எனும் பகுதியில் இயல்பான அளவைவிட கூடுதலாக திரவம் சேகரமாகி இருக்கும். இத்தகைய பாதிப்பையும் பிரத்யேக சத்திர சிகிச்சை மூலம் நிவாரணம் அளிக்க இயலும்.
வைத்தியர் ஜோதி
தொகுப்பு அனுஷா.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM