இன்றைய சூழலில் எம்முடைய தலைமுறையினர் தங்களது வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைத்துக் கொண்டதால் எபிஜெனிடிக்ஸ் எனப்படும் புற மரபியல் மாற்றங்களால் பாதிக்கப்படுகிறார்கள் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
பொதுவாக எம்மில் பலருக்கும் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால் மரபணு காரணமா? அல்லது மரபணுவில் ஏற்பட்ட மாற்றம் காரணமா? அல்லது அது தொடர்பான மரபியல் சார்ந்த காரணிகளா? என ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதுண்டு. சில பாதிப்புகள் - பாரம்பரிய மரபணு குறைபாடு காரணமாக சில தலைமுறையினருக்கு தொடர்ந்து ஏற்படக்கூடும். இந்நிலையில் எபிஜெனிடிக்ஸ் எனப்படும் புற மரபியல் மாற்றம் குறித்த ஆய்வு தற்போது உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
நீங்கள் தற்போது வாழ்ந்து வரும் சுற்றுப்புற சூழல் மற்றும் வாழ்க்கைக்கான நடைமுறை தெரிவுகள் உங்களது மரபணு அமைப்பை பாதிக்கிறது. அதாவது மரபணுவின் வரிசையில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தாது.
ஆனால் அதற்கு மாறாக உங்கள் மரபணுவின் செயல்பாட்டில் இந்த எபிஜெனிடிக்ஸ் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக உங்கள் மரபணுவின் இயங்குத் திறன் அல்லது செயல்திறனில் பாதிப்பை உண்டாக்குகிறது.
சிலருக்கு இது இந்த தலைமுறையையும் அடுத்த தலைமுறையையும் பாதிக்கக்கூடும் என வைத்து நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
பொதுவாக புற்றுநோய், நீரிழிவு, நரம்பியல் சார்ந்த பாதிப்புகள் ஆகியவை குறித்து ஆய்வு நடைபெறும் போது இந்த எபிஜெனிடிக்ஸ் ஆய்வுகள் முக்கியத்துவம் பெறுகிறது.
இதனை உணர்ந்து கொண்டு நீங்கள் ஏதேனும் பாதிப்புகளுக்கு ஆளாகியிருந்தால்.. வைத்தியரிடம் எபிஜெனிடிக்ஸ் தொடர்பான பரிசோதனைகள் குறித்து விளக்கத்தையும், வழிகாட்டலையும் பெற வேண்டும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.
மன அழுத்தம், ஒவ்வாமையை ஏற்படுத்தும் ரசாயனங்கள், மாசடைந்த சூழல் என பல காரணங்களால் எபிஜெனிடிக்ஸ் பாதிப்புகளுக்கு நீங்கள் ஆளாகியிருந்தால் முறையான மற்றும் முழுமையான நிவாரண சிகிச்சைகளின் மூலம் இயல்பு நிலைக்கு திரும்ப இயலும் என வைத்தியர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்கள்.
வைத்தியர் ஜோவிதா
தொகுப்பு அனுஷா.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM