திருகோணமலையில் நடைபெறவிருக்கும் மக்கள் போராட்டம் : சர்வதேச நீதியை வலியுறுத்தும் வடகிழக்கு சமூக இயக்கம்

Published By: Digital Desk 2

25 Jul, 2025 | 07:52 PM
image

வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி சனிக்கிழமை (26) திருகோணமலை சிவன் கோவில் முன்பாக காலை 10.00 மணியளவில் பாரிய மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கையில்  மனித குலத்திற்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் மற்றும் போர்க் குற்றங்கள்  தொடர்பாக எதிர்வரும்  செப்டம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் எடுக்கப்படும் இலங்கை  தொடர்பான தீர்மானம் வலுப்பெறும்  வகையில்  குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வடக்கு கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் காலை 10.00 மணியளவில் குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் செம்மணி மனித புதைகுழி பகுதியிலும், முல்லைத்தீவில் மாவட்ட செயலகத்திற்கு அருகாமையிலும், கிளிநொச்சியில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகாமையிலும், வவுனியாவில் புதிய பேரூந்து நிலையத்திற்கு அருகாமையிலும், மன்னாரில் நகர்ப்பகுதியிலும், அம்பாறையில் திருக்கோவில் பகுதியிலும், மட்டக்களப்பில் காந்திப் பூங்கா பகுதியிலும் நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறையைக் கோரும் வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்களின் குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக “மாண்புமிகு மலையக மக்கள் சிவில் சமூக கூட்டிணைவு” கொழும்பு ஐக்கிய நாடுகள் சபை வளாகத்தின் முன்பாக காலை 10.00 மணியளவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக...

2026-08-12 00:34:35
news-image

இலங்கையில் ஐ- போன் பயன்படுத்துவோருக்கு கவலை...

2026-08-12 00:28:07
news-image

மகாநாயக்க தேரர்களின் முக்கிய கடிதம் மாயம்...

2026-08-11 12:40:04
news-image

நீதிபதிகளின் பதவிக்கால நீடிப்பு தொடர்பான மகாநாயக்க...

2026-08-11 15:07:40
news-image

அரசியல் பழிவாங்களுக்கு பொலிஸ் திணைக்களம் பயன்படுத்தப்படுகிறது...

2026-08-11 15:06:43
news-image

சர்வாதிகார யுகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் முதன்மை...

2026-08-11 16:12:43
news-image

இந்தியாவிலிருந்து இலங்கை திரும்புவோருக்கு குடிவரவு ஒப்புதல்...

2026-08-11 17:08:28
news-image

நீதிபதிகளின் வயதெல்லை நீடிப்பு: மகாநாயக்க தேரர்களின்...

2026-08-11 17:07:04
news-image

பிரதம நீதியரசர், நீதிபதிகள் மீது எதிர்க்கட்சியினர்...

2026-08-11 17:37:53
news-image

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்துக்கு பதிலாக...

2026-08-11 17:37:11
news-image

சிறைச்சாலை பாதுகாப்பிற்கு ஓய்வு பெற்ற இராணுவ...

2026-08-11 17:17:44
news-image

அரச அதிகாரிகளுக்கான கொடுப்பனவுகள் அடிப்படைச் சம்பளத்துடன்...

2026-08-11 17:47:45