இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று இரவு இலங்கை வந்தடைந்ததுள்ளது.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி தொடர்பான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள போட்டி அட்டவணை வருமாறு,

ஜூலை மாதம்  26 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் முதலாவது டெஸ்ட் போட்டியும் ஆகஸ்ட் மாதம் 3 ஆம் திகதி முதல்  7 ஆம் திகதி வரை கொழும்பு எஸ்.எஸ்.ஸி மைதானத்தில் 2 ஆவது டெஸ்ட் போட்டியும் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி முதல்  16 ஆம் திகதி வரை கண்டி பல்லேகல மைதானத்தில் 3 ஆவது டெஸ்ட் போட்டியும் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்திலும் 2 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டி ஆகஸ்ட் மாதம் 24 ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்திலும் 3 ஆவது ஒருநாள் சர்வதேச ஒருநாள் போட்டி ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கண்டி பல்லேகல மைதானத்திலும் 4 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டி ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்திலும் 5 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டிசெப்டெம்பர் மாதம் 3 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்திலும் இடம்பெறவுள்ளது.

இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான ஒருரேயொரு இருபதுக்கு - 20 போட்டி செப்டெம்பர் மாதம் 6 ஆம் திகதி கொழும்பு ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.