ஒரு தொகை கொக்கெய்ன் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதாக  இரத்மலானை பொலிஸார் தெரிவித்தனர்.

இரத்மலானை பொருளாதார நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட சீனி கொள்கலனில் இருந்து குறித்த கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த கொள்கலனில் இருந்து 160 கிலோ கொக்கெய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இதன் பெறுமதி அறியப்படவில்லையெனவும் இரத்மலானை பொலிஸார் தெரிவித்தனர்.