செல்வ வளம் அதிகரிப்பதற்கான பிரத்யேக வழிபாடு!?

Published By: Digital Desk 2

24 Jul, 2025 | 05:41 PM
image

இந்தப் பிறவியில் பொருளியல் சார்ந்த வாழ்க்கையை வாழ்வது தான் எமக்கான வாய்ப்பு என்பதை தெரிந்து கொண்டிருப்பவர்கள் அனைவரும் நாளாந்தம் பணம் எனும் செல்வ வளத்தை தேடி சலித்துக்கொள்ளாமல் ஓய்வில்லாமல் பயணித்துக் கொண்டே இருப்பார்கள்.

இவர்களுக்கு வருவாய் அதிகமாகவும் செலவினம் குறைவாகவும் இருக்க வேண்டும் என விரும்புவார்கள். அத்துடன் நாளாந்தம் குறிப்பிட்ட தொகையை சேமிக்க வேண்டும் என்றும், அந்த சேமிப்பின் தொகை நாளாந்தமோ அல்லது வாரந்தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் விரும்புவர். ஆனால் நடைமுறையில் இது சாத்தியமில்லை.

ஏனெனில் செலவினங்கள் எதிர்பாராததாக இருக்கும். இந்தத் தருணத்தில் எம்முடைய வீட்டில் சில விடயங்களை சூட்சமமாக மேற்கொள்வதால் செல்வ வளம் தொடர்ந்து அதிகரிக்கும் என எம்முடைய முன்னோர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இதற்கு தேவையான பொருட்கள் : மண்பானை, பச்சரிசி, ஐந்து ரூபாய் நாணயங்கள், மின்சாரத்தில் ஒளிரும் குறைவான மின்சாரத்தை பாவிக்கும் மின் விளக்கு, நாட்டு சர்க்கரை.

சந்தையில் விற்பனையாகும் மண்பானைகளில் உங்களுடைய பூஜை அறையில் வைக்கும் அளவிற்கு ஒரு மண்பானையை தெரிவு செய்து கொள்ளுங்கள். அந்த மண்பானையில் முனை மழுங்காத முனை உடையாத பச்சரிசியை கொண்டு அந்த மண் பானையை நிறைவு செய்யுங்கள்.

அதன் பிறகு அதன் மேல் அதன் மீது ஆறு என்ற எண்ணிக்கையிலான ஐந்து ரூபாய் நாணயங்களை வைத்து விடுங்கள்.

இதனை உங்களது பூஜை அறையில் இடம் பெறச் செய்யுங்கள். நாளாந்தம் நீங்கள் காலையில் எழுந்ததும் நீராடி இறைவணக்கத்தின் போது இந்த மண் கலசத்தையும் வணங்கிட வேண்டும். அந்தத் தருணத்தில், 'மகாலட்சுமி தாயே! எங்களது வீட்டில் செல்வ வளம் நிலைத்திருக்க வேண்டும்' என பிரார்த்தனை செய்யுங்கள்.‌

அதனைத் தொடர்ந்து மாதம் ஒருமுறை அந்த மண்பானையில் வைத்த பச்சரிசியை எடுத்து, அதனை மாவாக்கி அதனுடன் நாட்டு சர்க்கரையை கலந்து உங்களது வீட்டிற்கு அருகில் இருக்கும் மரங்களுக்கு அடியில் நாட்டு சர்க்கரை கலந்த பச்சரிசி மாவை தூவி விடுங்கள்.

இப்படி நீங்கள் செய்து கொண்டு வரும்போது ஆறு மாதத்திற்கு பிறகு உங்களுடைய செல்வ வளம் மேம்படுவதுடன் சேமிப்பும் அதிகரிப்பதை அனுபவத்தில் காண இயலும்.

இன்றைய சூழலில் எம்மில் பலரும் பூஜை அறையில் நாளாந்தம் விளக்கேற்றி இறைவணக்கம் செய்வது என்பது சாத்தியமற்றதாக இருக்கிறது.

ஏனெனில் பயணங்கள் மேற்கொள்வதால் இதனை திட்டமிட்ட தருணத்தில் மேற்கொள்ள இயலாத நிலை உண்டாகிறது.  இதன் காரணமாக உங்களது பூஜை அறையில் எப்பொழுதும் ஒளிரும் வண்ணம் பச்சை வண்ணத்தினாலான மின் விளக்கை ஒளிர விடுங்கள். இந்த பச்சை வண்ணத்திலான மின் விளக்கு செவ்வாய் + புதன் மற்றும் மகாலட்சுமி  அம்சத்துடன் திகழ்வதால் உங்களுக்கான செல்வ வளம் குறையாது இருக்கும்.

தொகுப்பு:  சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெப்ரவரி 29 ஆம் திகதி பிறந்தவர்களுக்கு...

2026-09-07 15:57:03
news-image

அசைவ உணவை யார் தவிர்த்திட வேண்டும்?

2026-09-05 16:50:55
news-image

ஏழரைச்சனியின் பாதிப்பிலிருந்து நிவாரணம் பெற!

2026-09-04 15:49:33
news-image

கடைசி பிறவிக்கான பிரத்யேக வழிபாடு என்ன?

2026-09-03 16:58:02
news-image

காரியத்தில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!?

2026-09-02 17:08:27
news-image

திருஷ்டி தோஷங்கள் நீங்க!?

2026-09-01 14:59:16
news-image

மாத ஊதியம் குறையாமல் நீடிப்பதற்கான பிரத்தியேக...

2026-08-31 17:31:58
news-image

ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள் -...

2026-08-31 14:40:21
news-image

கணவன் - மனைவி இடையே உள்ள...

2026-08-29 15:43:45
news-image

மனதிற்கினிய வாழ்க்கைத் துணை அமைவதற்கான எளிய...

2026-08-28 16:57:23
news-image

ராகு தோஷத்தை நீக்குவதற்கான எளிய வழிமுறை

2026-08-27 16:32:55
news-image

மகாலட்சுமி வழிபாடு : சில சூட்சமங்கள்

2026-08-26 16:50:28