இணையவழி மோசடியுடன் தொடர்புடைய சீன பிரஜை நாடு கடத்தப்பட்டார்

24 Jul, 2025 | 04:47 PM
image

இலங்கைக்கு வருகை தந்திருந்த இணையவழி மோசடியுடன் தொடர்புடைய சீன பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு இன்று வியாழக்கிழமை (24) நாடு கடத்தப்பட்டுள்ளார்.

28 வயதுடைய சீன பிரஜை ஒருவரே இவ்வாறு  நாடு கடத்தப்பட்டுள்ளார்.

இந்த சீன பிரஜை நேற்று புதன்கிழமை (23) மாலை 05.10 மணியளவில் மலேசியாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது இந்த சீன பிரஜையிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இலங்கையில் உள்ள வர்த்தகர் ஒருவரை சந்திப்பதற்காக வருகை தந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

பின்னர் விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், இந்த சீன பிரஜை இணையவழி மோசடியுடன் தொடர்புடையவர் என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இந்த சீன பிரஜை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் இன்று வியாழக்கிழமை (24) நாடு கடத்தப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிக்கான காத்திருப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது ; மனித...

2026-02-17 19:55:04
news-image

சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க புதிய...

2026-02-17 17:19:21
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர்...

2026-02-17 20:12:55
news-image

நமது நாட்டின் சட்ட ஆட்சி அச்சுறுத்தலுக்கு...

2026-02-17 17:18:54
news-image

இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா...

2026-02-17 18:31:47
news-image

பாடசாலைக் கட்டடங்களில் அவசர கால வெளியேற்றப்...

2026-02-17 18:28:00
news-image

பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் நீக்கம்: சட்டமூலம்...

2026-02-17 18:07:20
news-image

IMF முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா...

2026-02-17 18:17:29
news-image

இலங்கையின் மீளக் கட்டியெழுப்பும் திட்டம் மீதான...

2026-02-17 18:02:09
news-image

ரயில் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடத் தீர்மானம்

2026-02-17 17:44:02
news-image

பலாலி அம்மன் ஆலயத்துக்குச் செல்லும் வீதியை...

2026-02-17 17:46:56
news-image

2,000 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2026-02-17 17:30:57