உயர் நிலையிலான குடியிருப்புத் தொகுதிகள் அதிசொகுசு, நவீன வசதிகள் , பொழுதுபோக்கு அம்சங்கள் மற்றும் உடற்பயிற்சி நிலைய வசதிகள் போன்ற சலுகைகளுடன் நகரை அண்மித்ததாக அமைந்துள்ளமை வளர்ந்து வரும் ஒரு செயற்பாடு என சர்வதேச தொடர்மாடி குடியிருப்பு ஆலோசகர் ஜோன்ஸ் லாங் லாசல் வெளியிடப்பட்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடியிருப்பு தொகுதியின் விலை 25-35 மில்லியன் ரூபா வரை காணப்படுகிறது. குறிப்பாக நகரை அண்மித்த எல்லைப் பகுதியில் அமைந்துள்ளவற்றிற்கான கேள்வி மிக அதிகமாகும். இதனை இலங்கையின் முன்னணி தொடர்மாடி குடியிருப்பு அபிவிருத்தியாளர்கள் மற்றும் முன்னணி நகர அபிவிருத்தியாளர் மிலேனியம் ஹவுசிங் டிவலப்பர்ஸ் PLC உறுதிசெய்கிறது.

உயர் நிலையிலான திட்டங்களுக்கு மாற்றமடைந்துள்ள நடவடிக்கைiயை மிலேனியம் ஹவுசிங் டிவலப்பர்ஸ் PLC நிறுவனம் வெற்றிகரமாக கடந்த வருடம் முன்னெடுத்தது. அதன் முதலாவது உயர் நிலையிலான தொடர்மாடி குடியிருப்பு தொகுதி ‘The Height at Edmonton’ எனும் பெயரில் எட்மன்டன் வீதி, கிருலப்பனை பகுதியில் ஆரம்பிக ;கப்பட்டது. அதனையடுத்து மிக துரிதமாக கொழும்பு 05, நாவல வீதி பகுதியில் The Heights எனும் தொடர்மாடி கட்டிடத்தொகுதி முன்னெடுக்கப்பட்டது.

குறித்த எண்ணக்கருவை அடிப்படையாக கொண்டு பெறுநிறுவன துறைகள் மற்றும் முயற்சியாளர்கள் அல்லது முதலீட்டாளர்களுக்கு அதிசொகுசு மற்றும் புதிய வடிவமைப்புகளை உயர் தரத்தில் வழங்கும் வகையில் தற்போது 504, இராஜகிரிய வீதி, இராஜகிரிய பகுதியில் தொடர்மாடி குடியிருப்பு தொகுதி திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கவரக்கூடிய சலுகையுடன் கூடிய விலையில் ஆடம்பர Green Heights 504 இராஜகிரிய பகுதியில் அமைந்துள்ள தொடர்மாடி குடியிருப்பு தொகுதி தனது வடிவமைப்புகள் ஊடாக தனித்துவத்தைப் பெற்றுள்ளன. உயர் தரத்திலான வடிவமைப்புகள், நேர்த்தி, நடைமுறை வசதிகள், பொழுதுபோக்கு, விளையாட்டு வசதிகள் மற்றும் பராமரிப்பு செலவீனங்கள் என்பவை பெறுநிறுவன துறைகளின் முகாமையாளர்கள் மற்றும் முயற்சியாளர்களின் ஆகியோரின் தேவைகளுக்கு பொறுந்தும் வகையில் அமைந்துள்ளன.

குறித்த முயற்சிகள் ஊடாக மிலேனியம் ஹவுசிங் டிவலப்பர்ஸ் PLC நிறுவனம் தனது நிலையான வளர்ச்சியை சுட்டிக்காட்டியுள்ளது. அவ்வாறான சூழ்நிலை கணிப்பீட்டிற்கமைய 201/14 தலைவரின் பரிசீலணை. “2013 ஆம் ஆண்டளவில் குறித்த தொழிற்துறை மீள் அனுபவத்தை பெற்றிருந்த போதிலும் மலிவான நடுத்தர வருமான வீடமைப்புக்கான சாத்தியமான கேள்விகள் தொடர்ச்சியாக எழுச்சி பெற்றமைக்கான காரணங்களாக நகரமயமாக்கல் , வாடகை அல்லது குத்தகை வீடமைப்புக்கான உயர் விலை மற்றும் வீட்டுக்கடன் வட்டி விகித வீழ்ச்சி என்பன அமையப்பெற்றன. 2016 ஆம் ஆண்டில் தனிநபர் வருமானம் 4000 அமெரிக்க டொலர்கள் எனும் இலக்கை அடைவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியது. வீடமைப்பு துறைக்கு உச்சகட்ட ஒத்துழைப்பையும் வழங்கியதென” குறிப்பிடப்பட்டுள்ளது.

எமது முதல் நகர உயர் நிலை திட்டமான எட்மன்டன் வீதி , கொழும்பு 05ல் அமைந்துள்ள ‘The Heights திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்துவைக்கும் முன்னரே எமது இலக்குக்குரிய வாடிக்கையாளர்களின் தேவைகள் தொடர்பில் நாம் அதிக தெளிவைப் பெற்றுக்கொண்டோம். குறித்த திட்டத்துடன் நாம் அதிகளவான அறிவைப் பெற்றுள்ளோம். வாடிக்கையாளரின் நேர்மையான தேவைகளை முன்னெப்பொழுதும் இல்லாதளவிற்கு முழுமையாக பூர்த்தி செய்யும் வகையில் குறித்த திட்டம் அமையப்பெற்றது என்பதை தம்மால் தெரிவிக்கமுடியுமென ஆர்னு யின் தலைவர் ஹர்சித் தர்மதாச தெரிவித்துள்ளார்.

“புறநகர் பகுதியில் அமையப்பெற்றுள்ள இவ்வாறான அதிசொகுசு தொடர்மாடி வீடமைப்பு தொகுதி உங்கள் வாழ்க்கை முறை மற்றும் தரத்தில் சிறந்த மதிப்புகளை வழங்கும். காரணம் அபிவிருத்தியாளர்களின் காணிகளுக்கான நிதி ஒதுக்கீடு கொழும்பை விட மிகவும் குறைவாக காணப்படுகிறது. மிகவும் குறுகிய காலத்தில் வழக்கமானதும் உயர் தரத்திலுமான அதிசொகுசு வசதிகள் குறைந்த விலையில் கொழும்பின் வசதிகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்வதாக” அவர் தெரிவித்துள்ளார்.