இராமபிரானால் வழிபடப்பட்ட, வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் இன்று (24) நண்பகல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ நடைபெற்றது.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றினை ஒருங்கே கொண்ட இந்த ஆலயத்தின் மஹோற்சவமானது கடந்த வெள்ளிக்கிழமை (18) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இலங்கையில் மிகவும் உயரமான திராவிட முகப்புத்திர சிற்ப மகாரதம் கொண்ட ஆலயமாகவும் சிறப்புபெற்ற இந்த ஆலயத்தின் இரத பவனி நேற்று (23) நடைபெற்றது.
ஆலயத்தின் பிரதம குரு பிரம்மஸ்ரீ இரத்தினபுரன சுதாகர குருக்கள் தலைமையில் உற்சவம் நடத்தப்படுகிறது.
இன்று காலை விநாயகர் மற்றும் கொடித்தம்பத்திற்கு விசேட பூஜைகள் செய்யப்பட்டு, திருப்பொற்சுண்ணம் இடிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
பின்னர், வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடத்தப்பட்டு, சுவாமி வீதியுலா சென்றது.
வெளிவீதியில் எருது வாகனத்தில் தீர்த்தக்கரையில் எழுந்தருளி அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
பிரமகர்த்தி தோஷம் நீங்கப்பெறும் ஆலயம் என்ற சிற்பினைக் கொண்ட ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் ஆடி அமாவாசை தீர்த்தோற்சவம் நடைபெற்றது.
இன்றைய தீர்த்தோற்சவத்தில் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது தந்தையை இழந்தவர்கள் இன்றைய தினம் பிதிர்க்கடன் செலுத்தி தமது தோஷங்களை நிவர்த்தி செய்தனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM