மின்சார சபை சட்டமூலத்தை சட்ட மா அதிபரின் ஆலோசனையின்றி தன்னிச்சையாக நிறைவேற்ற மின்சக்தி அமைச்சர் முயற்சி - எஸ்.எம்.மரிக்கார்

23 Jul, 2025 | 05:56 PM
image

(எம்.மனோசித்ரா)

ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் காஞ்சன விஜேசேகர சமர்ப்பித்த மின்சாரசபை திருத்த சட்ட மூலத்தையே தற்போதைய அரசாங்கமும் முன்வைத்துள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனையுடன் நிறைவேற்ற வேண்டிய உள்ளடக்கங்களை மின்சக்தி அமைச்சர் தன்னிச்சையாக நிறைவேற்ற முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில்  புதன்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாராளுமன்றத்தில் இலங்கை மின்சார சபை திருத்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இயலாமை இதன் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபை உள்ளிட்ட பல முக்கிய தரப்பினரை அழைத்து இந்த சட்டமூலத்தில் காணப்பட்ட சிக்கலான விடயங்களை நிவர்த்தி செய்து கொடுத்துள்ளோம்.

இதன் போது இரு காரணிகள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமையவே செயல்படுத்தப்பட வேண்டும் என்று தீர்மானமும் எடுக்கப்பட்டது.

ஆனால் தற்போதுள்ள மின்சக்தி அமைச்சர் தன்னிச்சையாக அவரது விருப்பத்துக்கமைய இந்த சட்டம் மூலத்தை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.

2024இல் காஞ்சன விஜயசேகர சமர்ப்பித்த அதே சட்டமூலத்தையே தற்போதைய அரசாங்கமும் சமர்ப்பித்துள்ளது. இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தொழிற்சங்கங்கள் கால அவகாசம் கோரியும் 7 மாதங்கள் கடந்தும் அமைச்சர் அவர்களை சந்திக்க தயாராக இல்லை. இவர்களது இயலாமையால் எடுக்கப்படும் நடவடிக்கைகளால் நாட்டு மக்களே பாதிக்கப்படுவர்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் எனக் கூறிய அரசாங்கம் தற்போது அது தொடர்பில் எதனையும் கூறுவதில்லை. நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்குவதற்கு அரசாங்கம் எடுக்கும் எந்த ஒரு நடவடிக்கைகளுக்கு எதிர்க்கட்சிகளும் முழுமையான ஆதரவை வழங்கும். ஆனால் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு...

2026-03-14 17:26:09
news-image

தற்போதைய அரசாங்கத்தின் தரமற்ற நிலக்கரி ஊழலானது...

2026-03-14 17:20:13
news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு...

2026-03-14 17:12:12
news-image

தமிழ்க் கட்சிகள் கடமை தவறிவிட்டன; தலைமையை...

2026-03-14 17:05:14
news-image

சுகாதார சேவையில் பாரிய விரிவாக்கம்: 2,918...

2026-03-14 17:02:52
news-image

கட்டானவில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர்...

2026-03-14 16:39:49
news-image

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை...

2026-03-14 16:11:41
news-image

காத்தான்குடி கடற்கரையில் 25 அடி நீளமான...

2026-03-14 16:08:29
news-image

சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவைச் செயற்படுத்துக:...

2026-03-14 16:08:01
news-image

இலங்கை - தாய்லாந்து பௌத்த உறவை...

2026-03-14 15:43:28
news-image

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க ஐக்கிய மக்கள் சக்தி...

2026-03-14 15:15:53
news-image

விரிவான ஆலோசனையின் மூலம் தயாரிக்கப்பட்ட "தேசிய...

2026-03-14 15:03:57