கால் விரல்களை செயற்கையாக பொருத்த இயலுமா?

23 Jul, 2025 | 04:48 PM
image

இன்றைய திகதியில் எம்மில் சிலருக்கு எதிர்பாராமல் ஏற்படும் விபத்தின் காரணமாக கை விரல்கள் பாதிக்கப்படுகிறது. சிலருக்கு இரண்டு கைகளிலும் உள்ள பத்து விரல்களில் ஏதேனும் ஒன்றையோ அல்லது சிலவற்றையோ இழந்து விடக் கூடும் .இத்தகைய தருணத்தில் வைத்தியர்கள் இதற்கு பொருத்தமான நிவாரணத்தை வழங்க இயலும் என தெரிவிக்கிறார்கள்.

எம்மில் பெரும்பாலானவர்கள் அவர்களது கால் விரல்களை பாவிப்பதை விட.. கை விரல்களை தான் அதிக அளவில் பாவிக்கிறார்கள். இதனால் எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தின் காரணமாக கைவிரல்களை இழந்தால்.. அவர்களுக்கு சத்திர சிகிச்சை நிபுணர்கள் கால்களில் இருந்து விரல்களை அகற்றி அதை கைகளில் பொருத்தி அதன் இயல்பு தன்மையை மீட்டெடுக்கிறார்கள்.

இந்நிலையில் எம்மில் பலருக்கும் கால் விரல்கள் இல்லாமல் நடக்க இயலுமா ? என்ற சந்தேகம் எழும். கால் விரல்கள் இல்லாமல் எம்மால் காலை பாவித்து நடக்க இயலும் என்றும், இதற்கு முழுமையான நிவாரண சிகிச்சையை நோயாளிகள் பெற வேண்டியது இருக்கும் என்றும் குறிப்பிடுகிறார்கள். 

அத்துடன் கால் விரல்கள் இல்லாதது தொடர்பாக நோயாளிகள் உளவியல் சார்ந்த பாதிப்புகளுக்கு ஆளானால்.. அவர்களுக்காக செயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட கால் விரல்கள் தற்போது நவீன மருத்துவ தொழில்நுட்பத்தில் கிடைக்கின்றன. இதனை சத்திர சிகிச்சை நிபுணர்கள் மூலம் பொருத்தமாக மேற்கொண்டு இதிலிருந்து நிவாரணம் பெற இயலும் என்றும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

வைத்தியர் இப்ராஹிம் - தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்கோயிடோசிஸ் எனும் அரிய பாதிப்பிற்கான நவீன...

2026-08-11 16:51:59
news-image

டகோட்சுபோ கார்டியோமயோபதி எனும் இதய பாதிப்பிற்குரிய...

2026-08-10 15:50:50
news-image

விர்ச்சுவல் ஒட்டிசம் எனும் மெய்நிகர் ஒட்டிச...

2026-08-07 16:13:19
news-image

பித்த நாள அடைப்பை சீராக்கும் நவீன...

2026-08-06 18:37:33
news-image

கார்டியாக் மைக்ஸோமா எனும் இதயத்தில் ஏற்படும்...

2026-08-05 17:02:41
news-image

தசை இறுக்கத்திற்கு நிவாரணமளிக்கும் பனிக்கட்டி குளியல்...

2026-08-04 15:26:44
news-image

ப்ரௌன் ஃபேட் எனும் பழுப்பு கொழுப்பு...

2026-08-01 17:00:28
news-image

குரல் வளை முடிச்சு அல்லது குரல்...

2026-07-31 16:37:19
news-image

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை :...

2026-07-31 14:15:13
news-image

புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-30 17:14:50
news-image

மேல் தோல் பகுதியில் உள்ள மரபணுகளின்...

2026-07-29 17:03:14
news-image

கட்டுப்பாடற்ற சிறுநீர் கசிவு பாதிப்பிற்கு நிவாரணம்...

2026-07-28 17:21:34