பாராளுமன்றில் சித்திரவதை முகாம்களை நடத்தியவர்கள் விரைவில் நடவடிக்கையென சபை முதல்வர் தெரிவிப்பு

23 Jul, 2025 | 03:44 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

தனிப்பட்ட சித்திரவதை முகாம்களின் உரிமையாளர்களும், கொலைகாரர்களின் பிள்ளைகளும் இந்த பாராளுமன்றத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுத்து கைதுசெய்வோமென சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (23) வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்களான ரோஹினி குமாரி விஜேரட்ன மற்றும் தயாசிறி ஜயசேகர ஆகியோர் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் கேள்வியெழுப்பி உரையாற்றிய போது அவர்கள் முன்வைத்த கருத்துக்கள் தொடர்பில் கூறுகையிலேயே சபை முதல்வர் இவ்வாறு தெரிவித்தார்.

1989 பெப்ரவரி  8ஆம் திகதி ஶ்ரீ தலதா மாளிகை மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் ரோஹினி குமாரி விஜேரட்ன கேள்வியெழுப்பியதுடன், அவரை தொடர்ந்து தயாசிறி ஜயசேகர இடைக் கேள்வியை எழுப்பி உரையாற்றினார்.

இதன்போது, ஶ்ரீ தலதா மாளிகை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது 17 துப்பாக்கிகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இதனுடன் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அப்போது பெரஹராவை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

முன்னாள் பொலிஸ் அதிகாரி என்ற வகையிலும், தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையிலும் இது தொடர்பான தகவல்களை அறிந்திருப்பீர்கள் அதனை வழங்குங்கள் என்று தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பி குறிப்பிடுகையில்,

மாத்தளை மனித புதைகுழியில் 140 வரையிலான எலும்புகூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அந்த கொலைகாரர்களின் மகள்மார் இங்கே இருக்கின்றனர். இது தொடர்பில் விசாரணை நடத்தப்படுகின்றது. இங்கே இருப்பவர்களில் சிலர் தனிப்பட்ட சித்திரவதை முகாம்களின் உரிமையாளர்கள் என்றார்.

அதனைத் தொடர்ந்து ஒழுங்கு பிரச்சினையை எழுப்பி எழுந்த தயாசிறி ஜயசேகர எம்.பி, அவ்வாறு இங்கே சித்திரவதை முகாம் வைத்திருந்தவர்கள் இருப்பார்கள் என்றால் அவர்கள் யார் என்று கூறுங்கள் என்றார்.

இதனை தொடர்ந்து மீண்டும் எழுந்த சபை முதல்வர், 88/89 காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில்  இருந்த எம்.பிக்கள், அமைச்சர்கள் தனிப்பட்ட சித்திரவதை முகாம்களை வைத்திருந்தனர் என்பது புதிய விடயமா? குண்டுத்தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நபர் ஐக்கிய தேசியக் கட்சியில் கண்டியில் தேர்தலில் போட்டியிட்டார்.

88/89 காலத்தில் 60 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டனர். சித்திரவதை முகாம்களை நடத்தினர். பெயர் மட்டுமல்ல. நீதிமன்ற நடவடிக்கை ஊடாக இவர்களை கைது செய்வோம் என்றார்

இதன்போது சபையில் ஆளும் தரப்பினருக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் கருத்துக்கு பதிலளிக்க அவர்கள் சந்தர்ப்பம் கேட்டபோதும் சபாநாயகர் அதற்கு இடமளிக்காது, சபை நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்துச்சென்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரூ.24 பில்லியன் நட்டத்தில் இருந்து இலாப...

2026-09-09 12:25:53
news-image

20 ஆண்டுகளாக நிலுவையிலிருந்த மலையக மக்களின்...

2026-09-09 17:35:50
news-image

மலையக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்...

2026-09-09 12:45:30
news-image

மலையக மக்களின் வீடு, காணி உள்ளிட்ட...

2026-09-09 17:31:26
news-image

ராஜபக்‌ஷ குடும்ப அரசியலுக்கு இனி மக்கள்...

2026-09-09 13:44:30
news-image

ராஜ்நாத் சிங் இலங்கை விஜயத்தில் கைச்சாத்திடப்பட்ட...

2026-09-09 17:30:07
news-image

மன்னார்–இராமேஸ்வரம் நேரடி பயணிகள் கப்பல் சேவையை...

2026-09-09 14:12:24
news-image

திருகோணமலை துறைமுகத்தில் உள்ள ஈரான் கப்பல்...

2026-09-09 17:02:51
news-image

பயங்கரவாதத் தடைச் சட்டம்: அரசாங்கத்தின் சர்வதேச...

2026-09-09 14:21:59
news-image

பெருந்தோட்டக் கம்பனிகளின் குத்தகை காலத்தை நீடிக்கும்...

2026-09-09 17:36:29
news-image

இந்திய கடற்படையின் பிரதிப் பிரதானி உத்தியோகபூர்வ...

2026-09-09 22:49:48
news-image

நாட்டில் அதிகரிக்கும் கொலைச் சம்பவங்கள்: தேசிய...

2026-09-09 14:52:24