எஹலியகொட பிரதேசத்தில் 34 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக மூத்த சகோதரனை இளைய சகோதரர்கள் மூவர் சேர்ந்து கத்தியால் குத்தி தடிகளால் தாக்கியதன் காரணமாகவே உயிரிழந்துள்ளார் என எஹலியகொட பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம் குறித்து சந்தேக நபர்களான சகோதர்கள் மூவரையும் பொலிஸார் கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.