இலங்கை மத்திய வங்கி நாணய கொள்கை நிலைப்பாட்டை மாற்றமின்றி பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. அந்த வகையில் ஓரிரவுக்கொள்கை வட்டி வீதம் 7.75 ஆக காணப்படுமென இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய முன்னேற்றங்களை கருத்தில் கொண்டு, ஓரிரவுக் கொள்கை வட்டி வீதத்தை தற்போது காணப்படும் 7.75 வீதமாக பேணுவதற்கு சபை தீர்மானித்துள்ளது.
தற்போதைய பணவியல் கொள்கை நிலைப்பாடு மற்றும் அதன் வளர்ச்சியை ஆதரிக்கும் அதேவேளை, எதிர்வரும் காலகட்டத்தில் பணவீக்கத்தை 5 வீத இலக்கை நோக்கி நகர்த்த உதவும் என்று சபை கருதுகிறது.
நேற்று செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற நாணயக் கொள்கைச் சபையின் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (23 ) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட அதிகாரிகள் விளக்கங்களை வழங்கினர்.
நாணயக் கொள்கைச் சபையானது நேற்று செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற கூட்டத்தில் ஓரிரவு கொள்கை வீதத்தினை 7.75 சதவீதம் கொண்ட அதன் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்தது.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய அபிவிருத்திகள் ஆகிய இரண்டினையும் கவனமாகக் கருத்திற்கொண்டதன் பின்னர் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது. தற்போதைய நாணயக் கொள்கை நிலைப்பாடு பணவீக்கத்தை எதிர்வரும் காலத்தில் 5 சதவீதம் கொண்ட இலக்கை நோக்கி வழிநடாத்துவதில் உதவும் அதேவேளை வளர்ச்சிக்கு ஆதரவளிக்குமென நாணயக் கொள்கைச் சபை கருதுகின்றது.
எதிர்பார்க்கப்பட்டவாறு, கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் அசைவுகள் பணச்சுருக்க நிலைமைகளின் மேலதிகத் தளர்வொன்றினைப் பிரதிபலித்தன. பணவீக்கமானது இக்காலாண்டில் நேர்மறையாகத் திரும்பலடையுமெனவும் அதன்பின்னர் 5 சதவீதம் கொண்ட இலக்கினை நோக்கி வலுவாக அதிகரிக்குமெனவும் எறிவுசெய்யப்பட்டுள்ளது.
மையப் பணவீக்கமானது பொருளாதாரக் கேள்வி நிலைமைகளில் நிலையான மீட்சியொன்றினைப் பிரதிபலித்து, எதிர்வருகின்ற மாதங்களில் தொடர்ந்தும் படிப்படியாக அதிகரிக்கும்.
பொருளாதாரமானது 2025 இன் முதலாம் காலாண்டில் 4.8 சதவீதம் கொண்ட உறுதியான வளர்ச்சியொன்றினைப் பதிவுசெய்தது. இவ்வளர்ச்சி உத்வேகமானது அண்மைய காலத்திலும் தொடருமென முன்னணிப் பொருளாதாரக் குறிகாட்டிகள் எடுத்துரைக்கின்றன.
உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளின் மீளெழுச்சிக்கு ஆதரவளித்து, நாணய நிலைமைகள் தொடர்ந்தும் தளர்வடைந்தன. அண்மைய கொள்கை வட்டி வீதக் குறைவிற்கு பதிலிறுத்தும் விதத்தில் அநேகமான சந்தை வட்டி வீதங்கள் மேலும் வீழ்ச்சியடைந்துள்ளன.
2025 இன் இதுவரையான காலப்பகுதியில், தனியார் துறைக்கான கொடுகடன் விரிவாக்கமானது தொடர்ந்தும் வலுவடைந்ததாகவும் பரந்தளவிலானதாகவும் காணப்படுகின்றது. இத்தனியார் துறைக் கொடுகடன் விரிவாக்கமானது தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது.
விரிவடைந்துவரும் வர்த்தகப் பற்றாக்குறையொன்றிற்கு மத்தியில் வெளிநாட்டுத் துறை தொடர்ந்தும் தாக்குப்பிடிக்குந்தன்மையைக் கொண்டிருந்தது. சுற்றுலாத்துறை வருவாய்கள் மற்றும் தொழிலாளர் பணவனுப்பல்கள் போன்றவற்றிலிருந்தான உட்பாய்ச்சல்கள் மேலும் மேம்பட்டன.
படுகடன் தீர்ப்பனவுக் கொடுப்பனவுகளுக்கு மத்தியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் ஆரோக்கியமான மட்டங்களில் பேணப்பட்டன. மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படுகின்ற கிரமமான தேறிய வெளிநாட்டுச் செலாவணிக் கொள்வனவுகளுடன் ஒதுக்கினைக் கட்டியெழுப்புகின்ற முயற்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் ஐந்தாவது தொகுதி 2025 ஜூலை தொடக்கத்தில் பெறப்பட்டது.
உலகளாவிய ரீதியில், மாற்றம் பெற்று வருகின்ற வர்த்தகத் தோற்றப்பாடு மற்றும் மீண்டெழுகின்ற புவிசார் அரசியல் முரண்பாடுகள் என்பன காரணமாக கொள்கை நிச்சயமற்றதன்மை தீவிரமடைந்துள்ளது.
நாணயக் கொள்கைச் சபையானது உலகளாவிய நிச்சயமற்றதன்மைகள் இடம்பெறுவதனை கவனமாக கண்காணித்து உள்நாட்டு அபிவிருத்திகள் தொடர்பில் கிடைக்கப்பெறும் தரவுகளை மதிப்பீடு செய்யும். பணவீக்கமானது இலக்கினை அண்மித்து உறுதிநிலையடைவதனை நிச்சயப்படுத்துவதற்கு பொருத்தமான கொள்கை வழிமுறைகளை மேற்கொள்கின்ற அதேவேளை, பொருளாதாரம் அதன் உள்ளார்ந்த ஆற்றலினை அடைய ஆதரவளிப்பதற்குச் சபை தயார் நிலையிலுள்ளது.
நாணயக் கொள்கை மீளாய்வு மீதான அடுத்த கிரமமான அறிக்கை 2025 செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதியன்று வெளியிடப்படும். அத்துடன் ஆண்டிற்கு இரு முறை வெளியிடப்படும் நாணயக் கொள்கை அறிக்கை, 2025 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது அறிக்கை 2025 ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியன்று வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM