வேன் - மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதி விபத்து : ஒருவர் படுகாயம், வேன் சாரதி கைது

Published By: Priyatharshan

19 Jul, 2017 | 10:25 AM
image

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை பகுதியில்  இன்று காலை 8.10 மணியளவில் வேன் மற்றும் மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் கடும்காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிள் சாரதி கொட்டகலை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டதன் பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் - நுவரெலியா ஏ -7 பிரதான வீதியில் கொட்டகலை பகுதியிலிருந்து பத்தனை நோக்கிச் சென்ற பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் ஒன்றும் பத்தனையிலிருந்து கொட்டகலை கொமர்ஷல் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டர் சைக்களும் கொட்டகலை ரொசிட்டா நகர் பகுதியில் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் மோட்டார்சைக்கிளை செலுத்தி சென்ற சாரதியே கடும்காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும், வேன் சாரதி லொறி ஒன்றினை முந்திச் செல்ல முற்பட்ட போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்துடன் தொடர்புடைய வேன், லொறி, மோட்டார் சைக்கிள் ஆகியன பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42