பாணந்துறை துப்பாக்கிச் சூடு ; மலேசியாவுக்கு தப்பிச் செல்ல முயன்றவர் கட்டுநாயக்கவில் கைது!

22 Jul, 2025 | 06:21 PM
image

பாணந்துறை - ஹிரண, மாலமுல்ல பிரதேசத்தில் கடந்த 11 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் மலேசியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன்று செவ்வாய்க்கிழமை (22) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

பாணந்துறை - ஹிரண, மாலமுல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் அத்துமீறி நுழைந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த நபர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் சிகிச்சைக்காக பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர் மாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் ஆவார்.

இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தவர்  பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “குடு சலிந்து” என்பவரின் சகா என தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் மலேசியாவுக்கு தப்பிச் செல்வதற்காக இன்றைய தினம் காலை 10.40 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். 

இதன்போது 28 வயதுடைய சந்தேக நபர் விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பாணந்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க அபின் மற்றும்...

2026-07-14 16:58:44
news-image

அரசியலமைப்புடன் விளையாடுவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல்;...

2026-07-14 15:42:45
news-image

நீதித்துறையை ஆக்கிரமித்து எதிர்க்கட்சிகளை முடக்க அரசு...

2026-07-14 17:44:19
news-image

அரசை விமர்சித்து சரியான பாதைக்கு திருப்புவோம்;...

2026-07-14 14:22:50
news-image

204 மில்லியன் பெறுமதியான அதிநவீன ஆய்வக...

2026-07-14 14:27:28
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்துக்கு பரிந்துரைகள் அமுல்படுத்தாததே...

2026-07-14 14:35:40
news-image

இலங்கை மற்றும் தான்சானியாவின் நீரியல் வளர்ப்புத்...

2026-07-14 22:02:43
news-image

முன்னாள் கட்டார் நாட்டின் தலைவரின் இறுதிச்சடங்கில்...

2026-07-14 21:57:06
news-image

விவசாயிகளுக்கு சலுகைக் கடன் வழங்க புதிய...

2026-07-14 18:25:14
news-image

ஜே.வி.பி அரசாங்கத்தின் போலித்தனம் அம்பலம் ;...

2026-07-14 18:26:52
news-image

உளவுத்துறை மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலேயே பிரமுகர்...

2026-07-14 18:25:38
news-image

புதிய தமிழ் - முஸ்லிம் கட்சிகளின்...

2026-07-14 18:24:09