தூக்கமின்மைக்கான காரணங்களும், வகைகளும்?

22 Jul, 2025 | 05:48 PM
image

இன்றைய சூழலில் எம்முடைய இளைய தலைமுறையினர் தங்களுக்கான பணி நடைமுறையை அதாவது வேலை பார்க்கும் பாணியை மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

24 மணி தியாலமும் பணியாற்றுவது அல்லது உடலியல் இயக்கத்திற்கான சுழற்சி கடிகாரத்திற்கு எதிர் மாறாக பணியாற்றுவது அதாவது இரவு நேரங்களில் கண் விழித்து பணியாற்றுவது. 

இதன் காரணமாக அவர்களின் உறக்கம் தொடர்பான சுழற்சியில் பாரிய பாதிப்பு ஏற்பட்டு தூக்கமின்மை பிரச்சனைக்கு பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.

இந்நிலையில் இத்தகைய தூக்கமின்மை பிரச்சனைக்கான காரணங்கள் என்ன?  என்பது குறித்தும், தூக்கமின்மை பாதிப்பின் வகைகள் குறித்தும் வைத்தியர்கள் பின்வருமாறு விளக்கம் அளிக்கிறார்கள்.

பொதுவாக நாம் நாளாந்தம் இரவு நேரத்தில் உறங்குவதற்காக படுக்கைக்கு சென்றவுடன் இருபதிலிருந்து முப்பது நிமிடங்களுக்குள் தூங்கி விடுவோம். இது இயல்பான நிலை.

ஆனால் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் அதாவது ஸ்லீப் ஆன்செட் இன்சோம்னியா என மருத்துவ மொழியில் குறிப்பிடப்படும் பாதிப்பிற்கு ஆளானவர்கள் படுக்கைக்கு சென்று உறங்க தொடங்கி ஒரு மணி தியாலத்திலிருந்து இரண்டு மணி தியாலம் வரை உறக்கம் வராமல் தவிப்பர்.

இது முதல் வகை பாதிப்பு என்றும், இதனைத் தொடர்ந்து வேறு சிலர் படுக்கைக்கு சென்றவுடன் முப்பது நிமிடங்களுக்குள் உறங்க தொடங்குவர். ஆனால் இவர்களால் ஆரோக்கியமான  ஆறு மணி தியாலம் முதல் எட்டு மணி தியாலம் வரையிலான ஆழ்ந்த உறக்கத்தை மேற்கொள்ள இயலாது.

இவர்கள் இரண்டு மணி தியாலத்திற்கு ஒரு முறையோ அல்லது மூன்று மணி தியாலத்திற்கு ஒரு முறையோ உறக்கத்திலிருந்து கண்விழித்து விடுவர்.

அதன் பிறகு உறங்குவதற்கு முயற்சித்தாலும் உறக்கம் முழுமையாக ஏற்படாது. இத்தகைய பாதிப்பினை மருத்துவ முறையில் ஸ்லீப் மெயின்டனன்ஸ் இன்சோம்னியா என குறிப்பிடுகிறார்கள். இந்த இரண்டு வகையினதான உறக்கமின்மை பாதிப்பிற்கு ஆளாக வைத்தியர்கள் பல காரணங்களை பட்டியலிடுகிறார்கள்.

ஸ்ட்ரெஸ் எனப்படும் மன உளைச்சல், கவலை, டிப்ரெஸன் எனப்படும் மன அழுத்தம், முதுமை , வாழ்க்கை நடைமுறை, மரபணு, வாழ்க்கையில் நடைபெற்ற துயரச் சம்பவங்கள் ஆகிய பாதிப்புடன் ஓஸ்துமா போன்ற பாதிப்பும் இணைந்திருந்தால் இவர்கள் மேலே விவரிக்கப்பட்ட தூக்கமின்மை பாதிப்பிற்கு ஆளாகிறார்கள்.‌

இவர்களுக்கு ஸ்லீப் ஸ்டடி எனப்படும் தூக்கம் தொடர்பான தர பரிசோதனையை மேற்கொண்டு, அதன் அடிப்படையில் அவர்களுக்கான சிகிச்சை வழங்கப்படுகிறது. உளவியல் ஆலோசனை, பிரத்யேக மருந்தியல் சிகிச்சை மற்றும் வாழ்க்கை நடைமுறை மாற்றம் தொடர்பான பரிந்துரைகள் சிகிச்சைகளாக மேற்கொள்ளப்பட்டு நிவாரணம் அளிக்கப்படுகிறது.

வைத்தியர் நவீன் தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விர்ச்சுவல் ஒட்டிசம் எனும் மெய்நிகர் ஒட்டிச...

2026-08-07 16:13:19
news-image

பித்த நாள அடைப்பை சீராக்கும் நவீன...

2026-08-06 18:37:33
news-image

கார்டியாக் மைக்ஸோமா எனும் இதயத்தில் ஏற்படும்...

2026-08-05 17:02:41
news-image

தசை இறுக்கத்திற்கு நிவாரணமளிக்கும் பனிக்கட்டி குளியல்...

2026-08-04 15:26:44
news-image

ப்ரௌன் ஃபேட் எனும் பழுப்பு கொழுப்பு...

2026-08-01 17:00:28
news-image

குரல் வளை முடிச்சு அல்லது குரல்...

2026-07-31 16:37:19
news-image

கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை :...

2026-07-31 14:15:13
news-image

புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-07-30 17:14:50
news-image

மேல் தோல் பகுதியில் உள்ள மரபணுகளின்...

2026-07-29 17:03:14
news-image

கட்டுப்பாடற்ற சிறுநீர் கசிவு பாதிப்பிற்கு நிவாரணம்...

2026-07-28 17:21:34
news-image

புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் நியோஅட்ஜுவன்ட்...

2026-07-27 15:27:06
news-image

ஸ்கிசோஃப்ரினியா எனும் நாட்பட்ட மன சிதைவு...

2026-07-25 15:34:51