மஹர சிறைச்சாலை வளவில் உள்ள  பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதியில்லை ; பதிலாக 5 பேர்ச் காணி வழங்க நடவடிக்கை - ஹர்ஷன நாணயக்கார 

22 Jul, 2025 | 04:11 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்) 

மஹர சிறைச்சாலை வளவினுள் காணப்படும் பள்ளிவாசலுக்கு வெளியார் வருவதினால் பாதுகாப்பு அச்சறுத்தல் ஏற்படுகிறது. எனவே அந்த பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது. அதற்கு பதிலாக அந்த பிரதேசத்தில் 5 பேர்ச் காணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என நீதி, சிறைச்சாலைகள்  மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தி மரிக்கார் எம்.பி. குறிப்பிடுகையில்,

பண்டைய காலம் முதல் மஹர  சிறைச்சாலை வளவில் காணப்பட்ட பள்ளிவாசல் 2019ஆம் ஆண்டின் பின்னர் இயங்கும் நிலையில் இல்லை என்பதனை அமைச்சர்  அறிவாரா?அந்தப் பள்ளிவாசலை மீண்டும் பேணிவர அங்கீகாரம் பெற்றுக்கொடுக்கப்படுமா என்ற கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 

அமைச்சர் மேலும் கூறுகையில்,

மஹர சிறைச்சாலை வளவில் காணப்பட்ட பள்ளிவாசலுக்கான பாதை  சிறைச்சாலை பிரதான வாயிலே பயன்படுத்தப்படுகிறது. இதனால் பள்ளிவாசலுக்கு செல்வது போல் சிலர் சிறையில் இருப்பவர்களுக்கு செல்போன்கள், போதைப்பொருட்கள் போன்ற சட்டவிரோத பொருட்களை  வீசியுள்ளனர். அதேநேரம் இஸ்லாமியர் ஒருவர் இறக்கும் போதும் விவாக நிகழ்வுகளின்போதும் பலர் இந்த பள்ளிவாசலுக்கு வந்தனர். இதனால் சிறைச்சாலையினதும் அங்குள்ள அதிகாரிகள், கைதிகளினதும் பாதுகாப்புக்கு பெரும் அச்சறுத்தல் ஏற்பட்டது. அதனால்தான் அப்போதைய சிறைச்சாலை அத்தியட்சரினால்  பள்ளிவாசலுக்கான உரிமையை வழங்க முடியாது என தெரிவித்து பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு 2013 மார்ச் மாதம் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

அதேபோன்று பள்ளிவாசலுக்குரிய இடத்தை சிறைச்சாலைக்கு கையளிக்குமாறு தெரிவித்தும் பள்ளிவாசல் நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அதற்கு நிர்வாகம் எந்த பதிலையும் வழங்கவில்லை. மேலும் வெளிநபர்கள் இந்த பள்ளிவாசலுக்கு வருவதை தடை செய்யுமாறு தெரிவித்தும் சிறைச்சாலை அத்தியட்சகரால் 2019இலும் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது.

இந்த பள்ளிவாசலை மீண்டும் திறந்தால் அதே பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மீண்டும் ஏற்படும். எனவே பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதிக்க முடியாது. அதேவேளை சிறைச்சாலைக்கு சொந்தமான 5 பேர்ச்சஸ்  காணி அங்குள்ளது. தேவையானால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாதவாறு அந்தக் காணியை வழங்க நடவடிக்கை எடுப்போம். ஆனால் மஹர சிறைச்சாலை வளவினுள் காணப்படும் பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதிக்கப்படாது. அதேநேரம் 5பேர்ச்சஸ் காணிக்கு மேலதிகமாக அந்த இடத்தில் வழங்க முடியுமா என்பது தொடர்பில் உறுதியாக தெரிவிக்க முடியாது. என்றாலும் காணி தேவைப்படும் பட்சத்தில் அந்த காணியை பள்ளிவாசலுக்காக பெற்றுக்கொடுக்கத் தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயாராக இருக்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விவசாயிகளுக்கு எரிபொருள் விநியோகம்: ஒரு ஏக்கர்...

2026-03-16 14:13:58
news-image

சிக்கனமாக எரிபொருளைப் பயன்படுத்தினால் கிவ்.ஆர் முறைமை...

2026-03-16 14:40:34
news-image

அனைத்து மக்களும் சுதந்திரத்தை அனுபவிக்கும் சூழலை...

2026-03-16 13:51:53
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-03-16 14:16:20
news-image

நாட்டை வந்தடைந்தது மற்றுமொரு எரிபொருள் கப்பல்!

2026-03-16 13:38:22
news-image

ஊழல் குற்றச்சாட்டு: சஜின் வாஸ் குணவர்தனவுக்கு...

2026-03-16 14:11:42
news-image

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உபகரணத் தொகுதி ஒன்று...

2026-03-16 14:14:40
news-image

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேருக்கு...

2026-03-16 12:28:59
news-image

சித்திரை புத்தாண்டு: சர்ச்சை முடிவுக்கு வந்தது;...

2026-03-16 12:59:01
news-image

நோயாளர் காவு வண்டிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில்...

2026-03-16 12:53:47
news-image

அநுராதபுரத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் :...

2026-03-16 12:34:37
news-image

போலி எரிபொருள் அனுமதிபத்திர இணையத்தளம்; பொதுமக்களுக்கு...

2026-03-16 12:32:45