யாழ்.கல்­வி­யங்­காடு பொதுச் சந்­தையில் நிலவும் பிரச்­சி­னைகள் தொடர்­பாக ஆராய்­வ­தற்­காக வட மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன்  நேற்­றைய தினம் குறித்த சந்­தைக்கு நேரில் சென்று பார்­வை­யிட்டு அங்­குள்ள பிரச்­சி­னைகள் தொடர்­பாக வியா­பா­ரி­க­ளிடம் கேட்­ட­றிந்­து­கொண்டார். 

கல்­வி­யங்­காட்டு பொதுச் சந்தை வியா­பா­ரிகள்  வட­மா­காண முத­ல­மைச்­ச­ரிடம் சந்­தையில் உள்ள நிர்­வாக சீர்­கே­டுகள் கட்­டடத் தொகு­திகள் வாட­கைக்கு விடப்­பட்ட விட­யங்கள் தொடர்­பாக நேரில்  விஜயம் மேற்­கொள்­ளு­மாறு கோரிக்­கை­களை முன்­வைத்­தனர். 

குறிப்­பாக கடந்த 2015 தொடக்கம் மாந­கர சபைக்கு முறை­யிட்டும் உரிய வசதிகள் செய்து தரப்­ப­ட­வில்லை எனவும் மல­ச­ல­கூட வச­திகள் சீரில்லை. உரிய முறையில் சந்தை சுத்­தப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை என்றும் சந்தைத் கட்­டடத் தொகு­தியில் மேல் மாடியில் அமைந்­துள்ள கடைகள் ஒப்­பந்த அடிப்­ப­டையில் கொடுக்­கப்­பட்­டுள்­ளன. ஆனால் அவை திறக்­கப்­ப­டு­வ­தில்லை. அவற்றை வேறு ஆட்­க­ளுக்கு மாற்றிக் கொடுக்க வேண்டும் என்றும் சந்­தை­வி­யா­பா­ரி­களும் பொது­மக்­களும் முத­ல­மைச்­ச­ரிடம் கோரிக்கை விடுத்­தனர்.

மேலும் குறித்த பகு­தியில் இயங்கி வரும் 24 வர்த்­தக நிலை­யங்­க­ளுக்கும் மல­சல கூடங்­களோ பொதுக் கழிப்­ப­றை­களோ இல்­லா­மை­யினால் இங்கு பணி­பு­ரி­ப­வர்­களும் நுகர்­வோரும் பல்­வேறு சிர­மங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­றனர். இவை தொடர்பில் யாழ்.மாந­கர சபை ஆணை­யா­ள­ருக்கும் துறை­சார்ந்த அதி­கா­ரி­க­ளுக்கும் அறி­வித்தும் எவ்­வித நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை எனவே இவற்­றிற்கு துரி­த­மாக நட­வ­டிக்கை எடுக்­கும்­படி வேண்­டுகோள் விடுத்­தனர். 

குறித்த விட­யங்கள் தொடர்பில் மாந­கர சபை மற்றும் உள்­ளூ­ராட்சி அதி­கா­ரி­க­ளுடன் கலந்­து­ரை­யா­டிய முத­ல­மைச்சர்  நீர் வசதி, சுகா­தார விட­யங்­களை உடன் நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்டும் எனவும் மாநகர சபை அதிகாரிகளுக்குப் பணிப்புரைவிடுத்ததுடன் குறித்த விடயங்கள் தொடர்பாக 3 நாட்களுக்குள்  அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.