வழுக்கி விழுந்த காதலனை காப்பாற்றச் முயன்ற காதலி நீரில் அடித்துச்செல்லப்பட்டு மாயம் !

Published By: Digital Desk 2

21 Jul, 2025 | 12:06 PM
image

மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மஹியங்கனை 17 ஆம் கட்டை பகுதியில் நேற்றைய தினம் (20) வியன்னா  கால்வாய் ஒன்றில் வழுக்கி விழுந்த  தனது காதலனை காப்பாற்ற முற்பட்ட வேளையில் பெண் ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டு காணமல் போய் உள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

இலக்கம் 453, குடா கம்மான 10, வெலிகத்த பகுதியில் வசிக்கும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 26 வயதுடைய மணவியே இவ்வாறு  நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீரில் அடித்துச் செல்லப்பட்ட இளம் பெண், ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து தனது வீட்டிற்கு  காதலனுடன் 17 ஆம் கட்டைப் பகுதிக்கு  அருகில் வியன்னா கால்வாய்க்கு அருகில் இருவரும் நடந்து சென்று கொண்டிருந்த போது, காதலன்  வியன்னா கால்வாயில் தவறி விழுந்துள்ளார் அவரைக் காப்பாற்ற முயன்றபோது குறித்த இளம் பெண்ணும்  கால்வாயில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த நேரத்தில், அந்த இடத்தை கடந்து சென்ற மஹியங்கனை காவல் பயிற்சி கல்லூரியின் அதிகாரி ஒருவரும் அவரது மனைவியும் குறித்த இளைஞன் சத்தம் இடுவதை அவதானித்து உடன் தண்ணீரில் குதித்து அந்த இளைஞனை மீட்டுள்ளனர்.

பின்னர் குறித்த இளைஞன் தனது காதலி நீரில் அடித்துச் சென்றதாக தெரிவித்துள்ளார் பின்னர் ஊர் மக்கள் மஹியங்கனை பொலிஸார் இணைத்து குறித்த பெண்ணை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இருப்பினும் இன்றும் இளம் பெண் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு...

2026-03-14 17:26:09
news-image

தற்போதைய அரசாங்கத்தின் தரமற்ற நிலக்கரி ஊழலானது...

2026-03-14 17:20:13
news-image

சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஜப்பான் தூதுக்குழு...

2026-03-14 17:12:12
news-image

தமிழ்க் கட்சிகள் கடமை தவறிவிட்டன; தலைமையை...

2026-03-14 17:05:14
news-image

சுகாதார சேவையில் பாரிய விரிவாக்கம்: 2,918...

2026-03-14 17:02:52
news-image

கட்டானவில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர்...

2026-03-14 16:39:49
news-image

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை...

2026-03-14 16:11:41
news-image

காத்தான்குடி கடற்கரையில் 25 அடி நீளமான...

2026-03-14 16:08:29
news-image

சுயாதீன தேசிய பெண்கள் ஆணைக்குழுவைச் செயற்படுத்துக:...

2026-03-14 16:08:01
news-image

இலங்கை - தாய்லாந்து பௌத்த உறவை...

2026-03-14 15:43:28
news-image

எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க ஐக்கிய மக்கள் சக்தி...

2026-03-14 15:15:53
news-image

விரிவான ஆலோசனையின் மூலம் தயாரிக்கப்பட்ட "தேசிய...

2026-03-14 15:03:57