செம்மணி மனிதப் புதைகுழி : 2 ஆம் கட்ட அகழ்வின் 2 ஆவது பகுதி அகழ்வுப் பணி இன்று ஆரம்பம் !

21 Jul, 2025 | 09:50 AM
image

யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வின் இரண்டாவது பகுதிக்கான அகழ்வுப் பணிகள்  திங்கட்கிழமை (21) ஆரம்பிக்கப்படவுள்ளன.

சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவா ஆகியோரின் சமர்ப்பணங்களை ஆராய்ந்த யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம், அகழ்விற்கான இந்த அனுமதியை வழங்கி உள்ளது.

இந்தநிலையில், இன்று முதல் எதிர்வரும் 15 நாட்களுக்கு மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின், முதலாவது பகுதி அகழ்வுப் பணிகளின் போது 65 என்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதன்படி, அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள செம்மணி மனித புதைகுழி அகழ்வில் முதலாவதாக கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் 63 எலும்புக்கூடுகளும் அதற்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் இருந்து 2 எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டு மொத்தமாக 65 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இதில் சிறார்கள் மற்றும் பெண்களின் எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் பொம்மை, புத்தகப்பை, உட்பட பல தடயப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், இந்த அகழ்வுப் பணி தொடர்பில் இறுதியாக நடைபெற்ற நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது, செம்மணி- சித்துப்பாத்தியில் குற்றச்செயல் இடம் பெற்றுள்ளதாக தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் இரண்டாம் பகுதி அகழ்வு நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2050-க்குள் ஆசியா பொருளாதார மையமாகும்; இலங்கை...

2026-07-16 16:59:30
news-image

சிறைச்சாலைத் திணைக்களத்தில் புதிய ஆட்சேர்ப்பு, சேவை...

2026-07-16 13:15:11
news-image

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க...

2026-07-16 16:07:33
news-image

சுமந்திரனின் முன்மொழிவை தொல்பொருள் பணிப்பாளர் ஏற்றுக்கொண்டமை...

2026-07-16 16:08:27
news-image

அரசாங்கத்துக்கு எதிராக மக்களை வீதிக்கு இறங்குமாறு...

2026-07-16 16:14:53
news-image

எமது காலத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை...

2026-07-16 21:56:39
news-image

கனகராயன்குளத்தில் 14 வயது மகளை பாலியல்...

2026-07-16 21:52:12
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் : கைதிகளின்...

2026-07-16 19:10:42
news-image

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானை தமிழக...

2026-07-16 21:33:34
news-image

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் பிரவேசிக்க அனுமதி மறுப்பு...

2026-07-16 19:10:22
news-image

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 6...

2026-07-16 21:19:42
news-image

தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு...

2026-07-16 19:09:32