ஆடை மற்றும் இறப்பர் தொழிற்சாலைகளை பாதுகாக்க நடவடிக்கை - அமைச்சர் சமன்த வித்தியாரத்ன

Published By: Vishnu

20 Jul, 2025 | 11:33 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

அமெரிக்காவின் தீர்வை வரி அதிகரிப்பால் ஆடை மற்றும் இறப்பர் தொழிற்சாலைகள் வீழ்ச்சியடையாமல் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும் என பெருந்தோட்ட மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமன்த வித்தியாரத்ன தெரிவித்தார்.

பெருந்தோட்ட அமைச்சில் ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அமெரிக்காவின் வரி அதிகரிப்பால் அமெரிக்காவுக்கு  பிரதானமாக  ஏற்றுமதி செய்யும் ஆடை மற்றும் இறப்பர் உற்பத்திகளுக்கு ஓரளவேனும் பாதிப்பு ஏற்படும் என நாங்கள் நம்புகிறோம். என்றாலும் ஏற்கனவே 44 வீதமாக அதிகரிக்கப்பட்ட வரி வரியை 30 வீதமாக குறைத்துக்கொள்ள எங்களுக்கு முடியுமாகியுள்ளபோதும் அது போதுமானதல்ல. அதனால் இந்த வரி அதிகரிப்பை மேலும் குறைத்துக்கொள்ள தேவையான பேச்சுவார்த்தைகளை நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம்.

நாட்டின் இறப்பர் உற்பத்தியில் நூற்றுக்கு மூன்றில் ஒரு பகுதியை அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்கிறோம். அதனால் எங்களுக்கு வருடத்துக்கு 330 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கிறது. இந்த வரி அதிகரிப்பால் இந்த வருமானத்தில் சற்று பாதிப்பு ஏற்படும். என்றாலும் இந்த பாதிப்பை கட்டுப்படுத்திக்கொள்ள நாங்கள் பல்வேறு வழிகளில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். அமெரிக்காவுக்கு தாய்லாந்து, இந்துனேசியா போன்ற நாடுகளும் இறப்பர் ஏற்றுமதி செய்து வருகின்றன.  

ஆனால் அமெரிக்காவின் வரி விதிப்பில் இந்த இரண்டு நாடுகளையும் விட எமக்கு குறைவாகும். அதனால் இந்த சந்தர்ப்பத்தில் எமது பொருட்களுக்கு பாதிப்பு ஏற்படாது. ஆனால் எங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 30 வீத வரியைவிட வியட்னாம் போன்ற நாடுகளுக்கு குறைவாகவே வரி விதிக்கப்பட்டிருக்கிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் எங்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அதனால் எமது  தொழிற்சாலைகளுக்கு ஏற்படும் பாதிப்பை எவ்வாறு குறைத்துக்கொள்ள  முடியும் என்பது தொடர்பில் நாங்கள் பல்வேறு வழிகளில் கலந்துரையாடி வருகிறோம்.

குறிப்பாக அமெரிக்க வரி அதிகரிப்பால் பாதிக்கப்படும் எமது தொழிற்சாலைகளை பாதுகாக்கும் பாெருட்டு மாற்று வழிகளாக அமெரிக்கா அல்லாத வேறு நாடுகளின் சந்தைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம். அதனால் இந்த வரி அதிகரிப்பால் அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ள தொழிற்சாலைகளை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என்பதை அந்த துறைசார்ந்தவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹோமாகமவில் சட்டவிரோதமாக மாற்றியமைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்களுடன்...

2026-07-18 13:12:46
news-image

10 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத்...

2026-07-18 13:11:53
news-image

பொத்துவில் கடலில் தத்தளித்த மீனவர் கடற்படையினரால்...

2026-07-18 13:09:43
news-image

கதிர்காமம் கிரிவெஹெர விகாரையில் ஆசி பெற்றார்...

2026-07-18 12:34:33
news-image

நாட்டின் பல மாவட்டங்களில் பலத்த காற்று...

2026-07-18 12:23:27
news-image

25 ஆண்டுகள் பழமையான கொலை வழக்கு...

2026-07-18 11:44:46
news-image

நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலை...

2026-07-18 11:07:56
news-image

பெண்களின் திறன்களை வெளிக்கொணர்வதில் CCWE வழங்கும்...

2026-07-18 11:09:56
news-image

வவுனியாவில் விபத்து: நிறுத்தப்பட்டிருந்த டிப்பர் வாகனத்துடன்...

2026-07-18 10:00:56
news-image

உடலுக்குள் போதைப்பொருள் மாத்திரைகளை மறைத்து கடத்தி...

2026-07-18 09:44:20
news-image

அலவத்துகொடையில் மண் மேடு இடிந்து விழுந்து...

2026-07-18 08:43:27
news-image

இன்றைய வானிலை 

2026-07-18 06:33:05