பொலிஸ் உத்தியோகத்தர்களில் சுமார் 20 - 40 சதவீதமானோருக்கு தொற்றா நோய்

Published By: Vishnu

20 Jul, 2025 | 07:04 PM
image

(செ.சுபதர்ஷனி)

நாட்டில் தற்போது கடமையில் உள்ள  பொலிஸ்  உத்தியோகத்தர்களில் சுமார்  20 -  40 சதவீதமானோர் தொற்றா நோய்களால் பாதிப்புக்குள்ளாகியுள்ளதுடன் 30 சதவீதமானோர் தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரயந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.

புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட சப்பிரகமுவ மாகாண குற்றப்புலனாய்வு பிரிவு திறப்பு விழாவில் சனிக்கிழமை (19) சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டிருந்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அந்நிகழ்வில்  பதில் பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது கடமையில் உள்ள  பொலிஸ்  உத்தியோகத்தர்களில் சுமார் 20 -  40 சதவீதமானோர் தொற்றா நோய்களால் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 30 சதவீதமானோர் தொற்றா நோய்களுக்கான பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. மீதமாக உள்ள 30 சதவீதமானோர் மாத்திரமே நல்ல தேகாரோக்கியத்துடன் உள்ளனர்.

ஒரு சில அதிகாரிகள் குடும்பப் பிரச்சினை, தொழில்  பிரச்சினைகளால் தொற்றா  நோய்களுக்கு ஆளாகியுள்ளனர்.  ஆகையால் எதிர்வரும் நாட்களில் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பணிகளை ஒழுங்குபடுத்தவும், அவற்றை மேலும் திறம்படுத்தவும் எதிர்பார்த்துள்ளோம். அத்தோடு  உயரிய கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான சேவை சலுகைகளும் விரைவில் அதிகரிக்கப்படும். 

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் சம்பளம்  போதியளவானதாக இல்லை. குறைந்த சம்பளத்தையே  பெறுகின்றனர். ஆகையால் அவர்களின் சம்பளம் தொடர்பாக ஜனாதிபதியும் விசேட கவனம் செலுத்தியுள்ளார். இதனால் எதிர்வரும் வருடம்  பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான சம்பள திட்டத்தை  தயாரிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் விவசாய–உணவுக் கட்டமைப்புக்கு தீர்வுகளை உருவாக்க...

2026-08-19 10:47:48
news-image

சட்டவிரோதமாக கொண்டு வந்த சிகரெட்டுகளுடன் சீன...

2026-08-19 10:47:19
news-image

எல்நினோ தாக்கத்தால் இந்து சமுத்திர இருமுனை...

2026-08-19 10:21:24
news-image

இலங்கையின் கப்பல் சுற்றுலாத்துறையை மேம்படுத்த ஜேர்மன்...

2026-08-19 10:17:31
news-image

22ஆம் அரசியலமைப்புத் திருத்தம், நீதித்துறை திருத்தச்...

2026-08-19 10:00:21
news-image

கட்டுநாயக்க, ஹிரண, ஹோமாகமவில் பொலிஸார் முற்றுகை:...

2026-08-19 10:17:03
news-image

சுகாதார சமத்துவம், பெண்கள் தலைமைத்துவம் குறித்து...

2026-08-19 09:30:56
news-image

பணச்சலவை சட்டத்தின் கீழ் 19 வயது...

2026-08-19 09:30:19
news-image

வியட்நாம் - இலங்கை இடையே நேரடி...

2026-08-19 09:01:40
news-image

எல்.ரீ.ரீ.ஈ முகாம் தொடர்பான போலிப் பிரச்சாரம்:...

2026-08-19 09:19:42
news-image

இன்றைய வானிலை 

2026-08-19 06:17:02
news-image

 மன்னார் விடத்தல் தீவு கிராமத்தில் சிறப்பாக...

2026-08-19 06:09:36